- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலியல் துன்புறுத்தல் வழக்கில் எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு - மேல்முறையீடு செய்ய...

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு – மேல்முறையீடு செய்ய தயாரான கேரள நடிகைகள் கூட்டமைப்பு!

- Advertisement -

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகில் உள்ள அத்தாணி பகுதியில் கடந்த 2017ம் ஆண்டில் இந்த சம்பவம் நடந்தது. அவ்வழியாக கேரவனில் சென்ற நடிகை பாவனாவை வழிமறித்த ஒரு கும்பல், அவரை காரில் கடத்திச் சென்றது. காருக்குள் அந்த கும்பல் அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது.

இது கேரளா சினிமாத் துறையினர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநில குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின்படி மலையாள நடிகர் திலீப்புக்கும் பாவனாவுக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாகவே இது நடந்ததாக தெரிய வந்தது.

- Advertisement -

இதற்காக சதிதிட்டம் தீட்டி நடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததும் தெரிய வந்தது.இதில் நடிகர் திலீப் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. திட்டமிட்டு என்னை சிக்க வைத்துள்ளனர் என்று நடிகர் திலீப் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த எர்ணாகுளம் நீதிமன்றம், நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்தது, மேலும் அவரது நண்பர் சரத் என்பவரையும் பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து கோர்ட் விடுவித்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மார்ட்டின் ஆண்டனி மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளி என்றும் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாவனாவின் பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மற்ற 6 குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து வரும் 12ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் கேரளா நடிகைகள் கூட்டமைப்பு, வழக்குகளில் இருந்து அதிகாரம் மிக்க நபர்கள் விடுதலை செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. அதனால் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்