நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியான படம் படையப்பா. இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. இதில் ரஜினிக்கு அப்பாவாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். ரம்யாகிருஷ்ணன் இந்த படத்தில் நீலாம்பரி என்ற வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.
வருகிற 12ம் தேதி ரஜினிகாந்த் 75வது பிறந்த நாளில் படையப்பா படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ரஜினிகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். 26 ஆண்டுகளுக்கு பிறகு படையப்பா படம் புதுப்பொலிவுடன் வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது.
பயைப்பா படம் குறித்து நேர்காணல் ஒன்றில் நேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஐஸ்வர்யா ராய்தான் நினைவுக்கு வரும். இந்த கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராய்தான் கரெக்ட். அவங்க தான் இதை செய்யணும் என்று நான் நினைத்தேன். அவங்க அப்போ ரொம்ப பிஸியாக இருந்தாங்க. இருந்தாலும் ட்ரை பண்ணலாம் என்று இருந்தேன்.
அவரது கால்ஷீட்டுக்காக மூணு நாலு மாசம் சுத்தி இருக்கோம். ஆனா அவங்க பண்றேன்னு சொல்ல மாட்டேங்கறாங்க. பிஸியா இருக்காங்க. அங்கே இங்கே பார்க்கறோம். ஆனா உறுதி செய்ய முடியலே. சினிமா துறை சார்ந்தவங்க மட்டும் இல்லாம அவங்க ரிலேட்டிவ்ஸ் மூலமாகவும் நாம ட்ரை பண்ணினோம்.
அவங்க கேரக்டர் நல்லா இருக்கு, நான் பண்றேன் என்று சொல்லி இருந்தால் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் வேண்டும் என்றாலும் வெயிட் பண்ணலாம். அதுல ஒண்ணும் பிராப்ளம் கிடையாது. ஏன்னா அந்த படத்துல நீலாம்பரி கேரக்டர் ஹிட் ஆனா தான் படம் ஹிட். இல்லேன்னா அந்த படம் பெருசா ஜெயிக்க முடியாது. வாய்ப்பே இல்லை.
ஆனா அதுக்கு அப்புறம்தான் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த படத்துல நடிக்க இஷ்டம் இல்லேன்னு தெரிஞ்சுது. இஷ்டம் இல்லேன்னா நாம எதுக்கு கேட்கணும்? விட்டுவிடலாம்ன்னு முடிவுக்கு வந்துட்டோம். அப்புறம் ஸ்ரீதேவி மீனா மாதுரி தீக்ஷித் அப்படீன்னு நிறைய பேரு சொன்னாங்க. ஆனா எனக்கு ஒண்ணும் சரியா படலே. அப்புறம் கடைசியா அதுல நீலாம்பரியா ரம்யா கிருஷ்ணன் நடிச்சாங்க என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.





