- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போவது அந்த நடிகையா? வேற லெவல்...

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போவது அந்த நடிகையா? வேற லெவல் சம்பவமா இருக்குதே… ஆனா அப்படி ஒரு கண்டிஷன் போட்டாராமே?

- Advertisement -

கூலி படத்துக்கு பின் இப்போது நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இன்னும் சில வாரங்களில் இந்த படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. இதற்கிடையே ரஜினி பிறந்த நாளில் படையப்பா படம் மீண்டும் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியான 3 நாட்களில் ரூ. 10 கோடி வசூலை அள்ளிவிட்டது.

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 173 படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் நடிகர் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரிக்கிறார். படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

- Advertisement -

எப்போதுமே ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்ற உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களில் கதாநாயகி யார் என்பதில் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருக்கும். ஏனெனில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு நாயகியும் முன்னணி நட்சத்திர நடிகையாக இருப்பது மிக முக்கியம். அந்த வகையில் தலைவர் 173 படத்தின் கதாநாயகி நடிகை சாய்பல்லவி என தகவல் வௌியாகி உள்ளது.

மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தில் மலர் என்ற டீச்சர் கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் பெரிய அறிமுகம் பெற்றவர் நடிகை சாய்பல்லவி. தமிழில் அவர் மாரி 2 என்ஜிகே போன்ற சில படங்களில் நடித்தார். கார்கில் படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. ஆனால் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் சாய்பல்லவி நடித்த பிறகு அவரது இமேஜ் எகிறியது.

- Advertisement -

அந்த படத்தில் இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பாராட்டை பெற்றது. அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் தனது சம்பளத்தை ரூ. 2 கோடியில் இருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தியதாக அப்போதே தகவல் வெளியானது. இப்போது இந்தியில் இராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வரும் சாய்பல்லவி தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தில் நடிகை சாய்பல்லவி ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இந்த படத்தில் அவர் நாயகியாக நடிக்க அதிக சம்பளம் கேட்டிருக்கிறார். ரூ. 10 கோடி வரை அவர் சம்பளம் கேட்டதாகவும் தயாரிப்பு நிறுவனம் இதற்கு மறுத்ததாகவும் தெரிகிறது. ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில்தான் அமரன் படத்தில் சாய்பல்லவி நடித்து புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ரஜினி படம் என்பதால் அவர் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்