விஜய் டிவியில் கடந்த 8 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில் இப்போது 9வது ஆண்டில் சீசன் 9 நடந்து வருகிறது. இதில் 2017ம் ஆண்டில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ஆரம்பித்து வைத்தார். 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து விறுவிறுப்பாக ஒவ்வொரு சீசனையும் கொண்டு சென்றார்.
வாரத்தின் மற்ற நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட வாரத்தின் இறுதி நாட்களில் அதாவது சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தொகுப்பாளர் கமல்ஹாசனை பார்க்கவும் அவர் பேசுவதை கேட்கவுமே பார்வையாளர்கள் வந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆனால் கமல்ஹாசன் அளவுக்கு பேச்சில் சாதுரியமோ வார்த்தைகளில் பொடி வைத்து பேசுவதோ போட்டியாளர்களை சூசகமாக கலாய்ப்பதோ கமல்ஹாசன் அளவுக்கு விஜய் சேதுபதியிடம் பார்க்க முடியவில்லை. அதிலும் வீட்டுக்குள் பயங்கரமாக பிரச்னை செய்தவர்களை விட்டுவிட்டு அப்பாவிகளை வறுத்தெடுப்பதுதான் விஜய் சேதுபதியின் வழக்கமாக உள்ளது.
இதுவரை பிக்பாஸ் சீசனில் 8 ஆண்டுகளில் ஆரவ் ராஜூ ரித்விகா அர்ச்சனா ஆரி முகின் அசீம் மற்றும் முத்துக்குமார் என 8 பேர் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறை இதுவரை யார் டைட்டில் வின்னர் என்பதில் பார்வையாளர்களுக்கு பலத்த குழப்பம் நிலவி வருகிறது. அதே நேரத்தில் வின்னராகும் தகுதி மிக்க போட்டியாளர் யாரும் இல்லை என்ற ஆதங்கமும் நீடிக்கிறது.
ஏனெனில் இந்த சீசனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் பிரவீன் ராஜ். அவரை சில வாரங்களிலேயே வெளியே அனுப்பி விட்டனர். பிரஜின் நன்றாக விளையாட துவங்கிய வாரத்தில் அவரையும் வெளியே அனுப்பி விட்டனர். இப்போது கனி திவ்யா சான்ட்ரா சுபிக்ஷா அமித் கானா வினோத் எஃப்ஜே விக்கல்ஸ் விக்ரம் சபரி அரோரா கம்ருதீன் பார்வதி ஆகிய 12 பேர் வீட்டுக்குள் இருந்து வருகின்றனர்.
இந்த 12 போட்டியாளர்களில் யாருமே மிகச்சிறந்த போட்டியாளர் என்ற அடையாளத்தை 70 நாட்களாகியும் இதுவரை பிக்பாஸ் பார்வையாளர்களிடம் பெறவில்லை. அதிலும் பார்வதி கம்ருதீன் போன்றவர்களின் அநாகரிகமான செயல்களும் பேச்சும் பிக்பாஸ் சொன்னாலும் அலட்சியப்படுத்தும் அவர்களது போக்கும் வீட்டுக்கு அவப்பெயரை தந்துள்ளது. இந்நிலையில் கானா வினோத் டைட்டில் வின்னர் என்று பலரும் கூறினாலும் அவரும் அதற்கு தகுதியானவர் அல்ல என்பதே பலரது கமெண்ட் ஆக உள்ளது.





