- Advertisement -
Homeபொழுதுபோக்குசெலவுக்கு கூட கையில் பணமின்றி கஷ்டப்படுகிறாரா இயக்குனர் பாரதிராஜா….? ரஜினிக்கு அவசரமாக சென்ற மெசேஜ் -...

செலவுக்கு கூட கையில் பணமின்றி கஷ்டப்படுகிறாரா இயக்குனர் பாரதிராஜா….? ரஜினிக்கு அவசரமாக சென்ற மெசேஜ் – தனுஷ் செய்த சம்பவம், என்னதான் நடந்தது?

- Advertisement -

தமிழ் சினிமாவை இயக்குனர் பாரதிராஜா பெயரை உச்சரிக்காமல் அதன் வரலாறை சொல்ல முடியாது. ஏனெனில் தமிழ் சினிமாவின் அடையாளம் அவர். இயக்குனர் இமயம் பாரதிராஜா என்று அழைக்கப்படும் அவரது படங்களை இப்போதும் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுகின்றனர். இன்னொரு முறை 16 வயதினிலே இன்னொரு முறை முதல் மரியாதை போன்ற படங்களை தர எந்த இயக்குனராலும் முடியாது.

சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி உடல் நலக்குறைவால் 48 வயதில் காலமானார். தனது அன்பு மகனின் திடீர் மறைவால் மிகவும் மனம் கலங்கிப் போன இயக்குனர் பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில மாதங்களாக தங்கியிருந்தார். இப்போது சென்னைக்கு வந்து விட்டார்.

- Advertisement -

பாரதிராஜா இப்போது 80 வயதுகளை கடந்த நிலையில் முதுமை காரணமாக நினைவாற்றலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார் என்று அவரது சகோதரர் ஜெயராஜ் சமீபத்தில் கூறியது ரசிகர்களிடையே பலத்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடித்த பாரதிராஜா, இப்போது முழுநேர ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷூக்கு இயக்குனர் பாரதிராஜா செல்போனில் இருந்து பண உதவி கேட்டு மெசேஜ் வந்திருக்கிறது. அதைப் பார்த்தவுடன் நடிகர் தனுஷ், பண உதவி செய்திருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் தாத்தாவாக பாரதிராஜா நடித்திருந்ததால், அப்போது அவருக்கு சம்பளம் அனுப்பிய அதே வங்கி கணக்கில் ரூ. 15 லட்சத்தை தனுஷ் அனுப்பியிருக்கிறார்.

- Advertisement -

தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா மொபைல்போனில் இருந்து நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் என பலருக்கும் இதே போல் பண உதவி கேட்டு மெசேஜ் சென்றது. நடிகர் ரஜினிகாந்துக்கும் இப்படி ஒரு மெசேஜ் சென்றுள்ளது. இதைப் பார்த்து ரஜினிகாந்த் அதிர்ச்சிடைந்த நிலையில் தனது உதவியாளர்கள் மூலம் இதுகுறித்து விசாரிக்குமாறு கூறியிருக்கிறார்.

பண உதவி கேட்டு பாரதிராஜாவின் செல்போன் எண்ணில் இருந்துதான் மெசேஜ் சென்றிருக்கிறது. ஆனால் அந்த மெசேஜில் குறிப்பிட்டு சொல்லும் வங்கி கணக்கு பாரதிராஜாவுக்கு சொந்தமானது இல்லை என்று தெரிய வந்துள்ளது. வேறு ஒருவர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் பாரதிராஜாவுக்கு பணம் அனுப்புமாறு அதில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் இது பாதிக்கப்பட்ட பாரதிராஜா தான் உதவி கேட்கிறாரா? அல்லது அவரது பெயரை பயன்படுத்தி யாராவது மோசடி செய்கிறார்களா என்ற சந்தேகமும் கோலிவுட்டில் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்