தமிழ் சினிமாவில் இயக்குனர் கே பாக்யராஜ் ஆளுமை மிக்க ஒரு சிறந்த படைப்பாளியாக கடந்த 1980 – 90களில் இருந்தவர். அந்த காலகட்டத்தில் அவர் இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்தான். இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமை கே பாக்யராஜூக்கு மட்டுமே உண்டு. அதுமட்டுமின்றி எம்ஜிஆரின் கலைவாரிசும் அவர்தான் என்ற சிறப்பும் கொண்டவர்.
இயக்குனர் கே பாக்யராஜ் இதுவரை 32 படங்கள் டைரக்ட் செய்திருக்கிறார். அவரது படங்களில் நடித்த கதாநாயகிகள் குறித்த பட்டியலை பார்த்தால் எந்த ஒரு கதாநாயகிக்கும் அவர் படத்தில் ஒருமுறை மட்டுமே நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறார். 2வது முறை அவரது படத்தில் நடிக்க வாய்ப்பில்லை. ஆனால் 2 நடிகைகள் மட்டுமே அவருடன் 2 படங்களில் நடித்திருக்கிறார். அதாவது அவரது சொந்த இயக்கத்தில் உள்ள படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் சுமதி, அந்த 7 நாட்கள் படத்தில் அம்பிகா, மௌன கீதங்கள் படத்தில் சரிதா, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தில் மீனா, எங்க சின்ன ராசா படத்தில் ராதா, முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி ஆகியோர் பாக்யராஜூக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.
அதே போல் வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் நக்மா பவுனு பவுனுதான் படத்தில் ரோகிணி, தூறல் நின்னு போச்சு படத்தில் சுலக்சனா, டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் பூர்ணிமா, சின்ன வீடு படத்தில் கல்பனா, இது நம்ம ஆளு படத்தில் ஷோபனா, அவசர போலீஸ் 100 படத்தில் சில்க் ஸ்மிதா மற்றும் கௌதமி, ராசுக்குட்டி படத்தில் ஐஸ்வர்யா ஞானப்பழம் படத்தில் சுகன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதில் இன்று போய் நாளை வா, தாவணி கனவுகள், பாமா ருக்மணி படங்களில் கே பாக்யராஜூக்கு ஜோடியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். அதே போல் சுந்தரகாண்டம் படத்திலும் ஆராரோ ஆரிராரோ படத்திலும் பானுப்பிரியா கே பாக்யராஜூக்கு ஜோடியாக நடித்திருந்தார். மற்ற படங்களில் எல்லாமே பாக்யராஜ் தனக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு மீண்டும் வாய்ப்பு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் கே பாக்யராஜ் தன்னுடைய படங்களில் பெரும்பாலும் கண் கண்ணாடி அணிந்துதான் நடித்திருப்பார். அதனால் அவர் தனக்கு கதாநாயகியாக நடிக்கும் நடிகைக்கும் பெரும்பாலும் கண் கண்ணாடியை மாட்டி விட்டு விடுவார். பல படங்களில் இதை ரசிகர்கள் கூர்ந்து கவனித்தால் தெரிந்துக்கொள்ளலாம்.





