- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாட... ஒரு வழியாக ஷூட்டிங் கிளம்பும் அஜித்... எப்போ ரிலீஸ் செய்றதுனும் முடிவு பண்ணியாச்சாம்... விடாமுயற்சியின்...

அப்பாட… ஒரு வழியாக ஷூட்டிங் கிளம்பும் அஜித்… எப்போ ரிலீஸ் செய்றதுனும் முடிவு பண்ணியாச்சாம்… விடாமுயற்சியின் கடைசி முயற்சி சக்ஸஸ்தான் போல…

- Advertisement -

கடந்த பொங்கல் தினத்தன்று பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்ற போதும், வசூலை வாரி குவிக்க தவறவில்லை. வாரிசு படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுடன் இணைந்த விஜய், லியோ படத்தில் கமிட்டாகி நடித்தே முடித்து விட்டார்.

அடுத்ததாக விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த பக்கம் துணிவு ஷூட்டிங் நடக்கும்போதே, அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

அஜித் படத்தை விக்னேஷ் சிவன் எடுப்பதால் அவர் எந்த மாதிரியான கதை களத்தை தேர்வு செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், திடீரென விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மனகசப்பால் அவர் படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு யார் அஜித்தை இயக்கப் போகிறார் என்ற கேள்வி, இணையத்தில் தொடர்ந்து எழுந்து வந்தது.

விஷ்ணு வர்தன், சுதா கொங்கரா என பலரது பெயர்கள் இதில் அடிபட, சற்றும் எதிர்பாராத வகையில் அஜித்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது. தடையற தாக்க, தடம், மீகாமன் என கிரைம் திரில்லர் படங்கள் எடுப்பதில் கை தேர்ந்த மகிழ் திருமேனி, அஜித்துடன் இணைந்ததால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அஜித் பிறந்தநாளன்று அறிவித்த லைகா நிறுவனம், விடாமுயற்சி என படத்தின் டைட்டிலை அறிவித்தது.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை படங்களை தொடர்ந்து இந்த படத்திற்கும் வி செண்டிமெண்ட்தானா என ஆரம்பத்திலே அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று சிலர் இணையத்தில் பதிவிட்டதையும் பார்க்க முடிந்தது. இது ஒரு பக்கம் இருக்க, விடாமுயற்சி குறித்த எந்தவொரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. போதாகுறைக்கு அஜித்தும் பைக் டூருக்கு கிளம்பியதால், ஒரு வேளை படம் கைவிட பட்டதா என்னும் அளவுக்கு கேள்விகள் எழ ஆரம்பித்தன.

இந்த நிலையில், விடாமுயற்சியிலிருந்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த மாதத்தில் உறுதியாக ஷூட்டிங் பணிகள் ஆரம்பம் ஆகிறதாம். ஆக்ஷன் திரில்லர் படமாக விடாமுயற்சி உருவாக இருப்பதாகவும், ஐதராபாத் மற்றும் வெளிநாடுகளில் மூன்று கட்டங்களாக ஷூட்டிங் நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சற்று முன்