- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க ஏன் அரசியலுக்கு வரலே… கமல் விஜய் எல்லாம் வந்துட்டாங்களே…? நடிகர் சிவராஜ்குமார் சொன்ன...

நீங்க ஏன் அரசியலுக்கு வரலே… கமல் விஜய் எல்லாம் வந்துட்டாங்களே…? நடிகர் சிவராஜ்குமார் சொன்ன அதிரடி பதில் – இது வேற லெவல் சிவாண்ணா! !

- Advertisement -

கன்னட சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சிவராஜ்குமார். நம்மூரு சூப்பர் ஸ்டார் போல கன்னட சினிமாவில் அவர்தான் சூப்பர்கள். கன்னட ரசிகர்கள் எல்லாம் அவரை சிவாண்ணா என்றுதான் உறவுமுறை சொல்லி அழைக்கின்றனர். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் அசத்திய சிவராஜ்குமாரை தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடினர்.

இப்போது ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்திலும் சிவராஜ்குமார் நடித்திருக்கிறார். ஆனால் இதில் கெஸ்ட் ரோலாக இல்லாமல் படத்தில் அதிக காட்சிகள் அவர் வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயிலர் படத்தை தொடர்ந்து சிவராஜ்குமார் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த ஆண்டில் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் பலத்த அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவர் அமெரிக்காவுக்கு சென்று அங்கு மியாமி பகுதியில் உள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆனார். ஆபரேசனுக்கு பிறகு அவர் பூரண குணமடைந்த நிலையில் இப்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி விட்டார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில்நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவரிடம் பேசிய செய்தியாளர்கள், தமிழ்நாட்டில் இருந்து சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வந்து விடுகின்றனர். விஜயகாந்த் கமல்ஹாசன் சரத்குமாரை தொடர்ந்து இப்போது விஜய் என பலரும் அரசியலுக்கு வந்துவிட்டனர்.

- Advertisement -

கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நடிகர் நீங்கள். இன்னும் ஏன் நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்று கேள்வி கேட்டனர்.அதற்கு நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது, நான் அரசியலை விரும்பவில்லை. அரசியல் எனக்கு தெரியாது என்பதும் உண்மை. அரசியலுக்கு வரவும் எனக்கு விருப்பமில்லை. அரசியல்வாதியாக மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை, உதவிகளை நான் செய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எதுவும் இல்லை. அது எனக்கு தேவையும் இல்லை. அரசியலுக்கு வந்து உதவிகள் செய்தால் அதில் பாரபட்சம் வந்துவிடும். இவர்களுக்குதான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்துவிடும். ஆனால் இப்போது என் விருப்பம் போல யாருக்கு வேண்டுமானாலும் உதவிகள் செய்கிறேன். ஏனென்றால் இது என்னுடைய சொந்த பணம். என் உழைப்பால் வந்த பணம் என்று சிவராஜ்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்