நடிகர் விஜய் இப்போது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாக மாறி வருகிறார். அவர் தவெக கட்சியை துவங்கி 2 ஆண்டுகளே ஆன நிலையில் வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அவர்தான் தமிழக முதல்வராக அமரப் போகிறார் என்று பலரும் பேசத் துவங்கியிருக்கின்றனர். ஆனால் அது சாத்தியமே இல்லை என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
தவெக பொதுக்கூட்டங்களில் அரசியல் எதிரி திமுக கொள்கை எதிரி பாஜக என்றும் பேசி வரும் நடிகர் விஜய் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் திமுக ஒரு தீயசக்தி என்று கடுமையான விமர்சனம் செய்து பேசியது வைரலானது. இதனால் கடும் கோபமடைந்த திமுக, ஜனநாயகன் படத்துடன் பராசக்தி படத்தை மோத வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, மேடைக்கு மேடை நடிகர் விஜய் திமுக பெயரை சொல்லி திட்டுகிறார். திமுக ஒரு தீய சக்தி என்று உங்க தொண்டை கிழிய கத்தறீங்க. ஆனா ஒன்றிய அரசு என்று சொல்லும்போது பாஜக என்று உங்க வாயில் வர மாட்டேங்குது.
அது தற்செயலா வர மாட்டேங்குதா? அல்லது நம்ம ரேஞ்சுக்கு இவங்க எல்லாம் ஒரு ஆளா? இவங்க பேரை எல்லாம் சொல்லணுமான்னு விஜய் நினைக்கிறாரா என்று நமக்கு தெரியாது. ஆனா மக்கள் இதை எப்படி பார்க்கறாங்க? திமுக இணைய கூலிப்படை இதை எப்படி செட் பண்றாங்க என்று பார்க்கணும்.
திமுக காரங்க, பாஜக பேரை சொல்லவே விஜய் பயப்படுகிறார் என்று ஒரு விஷயத்தை எடுத்துட்டு வராங்க. அப்போ இப்படி ஒரு விஷயத்தையும் விஜய் பாஜக பேரை உச்சரிக்காததையும் மக்கள் கம்பேர் பண்ணி பார்ப்பாங்க. அப்போ அவங்க இது சரிதான் போலிருக்கு, விஜய் பாஜகவோட பி டீம்தான் போல இருக்குன்னு அவங்க நினைச்சிடுவாங்க.
இந்த ஆபத்தை எல்லாம் விஜய் கொஞ்சம் யோசித்து பேச வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் அரசியல் எதிரி கொள்ளை எதிரி என்று மட்டும் பேசாமல் அந்த பிரச்னைகளை பற்றி பேச வேண்டும். காவேரி பிரச்னை, திருப்பரங்குன்றம் பிரச்னை என நாட்டில் இருக்க கூடிய முக்கிய பிரச்னைகள் குறித்து அவர் பேச வேண்டும். அதுதான் சரியாக இருக்கும் என்று ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





