சினிமா உலகில் ஏமாற்று பேர்வழிகள் நிறைய பேர் உண்டு என்பார்கள். குறிப்பாக சென்னைக்கு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வருபவர் சிலரை, அங்கே இருக்கும் மோசடி பேர்வழிகள் பொய் சொல்லி ஏமாற்றி விடுவார்கள். அப்படிப்பட்ட காட்சிகள் தமிழ் படங்களிலேயே வந்துள்ளது.
நடிகர் கே பாக்யராஜ் கூட அப்படி நடிகர் செந்திலை ஏமாற்றுவது போல பொய் சாட்சி படத்தில் காட்டியிருப்பார். அதே போல் சினிமாவில் ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பின்றி இயக்குனராக வாய்ப்பின்றி திறமையான பலரும் இருக்கும் போது அந்த நேரத்தில் ஒருவர் உதவினால் அதுதான் அவர்களது வாழ்க்கையின் போக்கையே மாற்றுகிறது. அவர்களை கடவுள் போல உதவினார்கள் என்று சொல்வதும் கூட சரியாக தான் இருக்கும்.
இப்படிப்பட்ட ஒரு சம்பவம் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் மிஷ்கின். அவர் இயக்குனராவதற்கு முன்பு இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். அவரிடம் மிஷ்கினை சேர்த்துவிட்டவர் சுந்தர்.
தமிழ் சினிமாதுறையில் சுந்தர் நன்கு பரிச்சயமானவர். அதனால் வின்சென்ட் செல்வாவிடம், மிஷ்கின் குறித்து நல்லவிதமாக எடுத்து சொல்லி திறமையான மனிதர் என்று பரிந்துரை செய்திருக்கிறார். மிஷ்கினின் அப்போதைய வறுமையான வாழ்க்கை குறித்தும் அவரிடம் சொல்லி இருக்கிறார். சுந்தர் அதை எல்லாம் சொன்ன பிறகுதான் மிஷ்கினை வின்சென்ட் செல்வா உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார்.
ஏற்கனவே அவரிடம் நிறைய உதவி இயக்குனர்கள் இருந்த போதிலும் சுந்தர் சொன்ன காரணங்களுக்காக, உதவி இயக்குனராக மிஷ்கினை வின்சென்ட் செல்வா ஏற்றுக்கொண்டார் என்பதுதான் உண்மை. ஆனால் சினிமாவில் பெரிய ஆளாகி இயக்குனராக பிரபலமான பிறகு மிஷ்கின் அந்த நன்றியை சுத்தமாக மறந்துவிட்டார். சுந்தரையே யார் என்று கேட்கும் அளவுக்கு மாறிவிட்டார்.
ஒரு விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், யாருப்பா அது, அந்த பையன் பேரு என்ன சசுந்தர் தானே? அந்த பையன்தான் என்னை வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக ஜாயிண்ட் பண்ண வெச்சான் என்று மிகவும் அலட்சியமாக பேசியிருக்கிறார். ஆனால் இதுகுறித்து சுந்தரிடம் சிலர் சொன்ன போது அதை அவர் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்று அந்த வீடியோவில் பிஸ்மி கூறியிருக்கிறார்.





