- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிர்பார்த்த வெற்றியை தராமல் ஏமாற்றிய கொம்பு சீவி படம் - அப்செட் ஆன நடிகர் சண்முக...

எதிர்பார்த்த வெற்றியை தராமல் ஏமாற்றிய கொம்பு சீவி படம் – அப்செட் ஆன நடிகர் சண்முக பாண்டியன், கடைசியில் அப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டாரா?

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் கடந்த 1980 90களில் பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக பெரிய நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் இருந்தவர். 150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார். நடிகர் விஜயகாந்த் நடித்த படங்களுக்கு பெண் ரசிகைகள் மிகவும் அதிகம்.

ஏனென்றால் அவரது படங்களில் பெண்களின் கதாபாத்திரங்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும். அதே போல் சண்டை காட்சிகள் காமெடி காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகளில் விஜயகாந்த் மிக அற்புதமான நடிப்பை தருவார். விஜயகாந்த் நடித்த சண்டை காட்சிகள் விறுவிறுப்பாகவும் தத்ரூபமாகவும் இருக்கும் என்பதால் ரசிகர்களுக்கு மிக உற்சாகமாகவும் இருக்கும்.

- Advertisement -

குறிப்பாக கேப்டன் பிரபாகரன் புலன் விசாரணை மாநகர காவல் சின்னக்கவுண்டர் ஊமை விழிகள் என பல படங்கள் விஜயகாந்துக்கு பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்த பெருமை விஜயகாந்துக்கு உண்டு. அதே போல் பல நடிகர்களை தனது படங்களில் விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தவர். தமிழக அரசியல் களத்தில் தேமுதிக கட்சி தலைவராக பெரிய அங்கீகாரம் பெற்றவர்.

தங்களது தந்தை விஜயகாந்தை அரசியல் களத்தில் ஜெயிக்க வேண்டும் என்று கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் அரசியலிலும், சினிமா களத்தில் ஜெயிக்க வேண்டும் என இளைய மகன் சண்முகபாண்டியன் நடிகராகவும் களத்தில் குதித்திருக்கின்றனர். சகாப்தம் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் சண்முக பாண்டியன்.

- Advertisement -

அதன்பிறகு மதுர வீரன் படை தலைவன் ஆகிய 2 படங்களில் அவர் நடித்தார். அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை. தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடித்த 4வது படம் கொம்புசீவி. இந்த படம் கடந்த 19ம் தேதி வெளியான நிலையில் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இந்த படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை. அதனால் நடிக்க விருப்பமில்லை என்று சண்முக பாண்டியன் மறுத்த நிலையில் அவரது அம்மா பிரேமலதா, மாமா எல்கே சுதீஷ் இருவரும்தான் வற்புறுத்தி சண்முக பாண்டியனை நடிக்க வைத்திருக்கின்றனர். இப்போது கொம்பு சீவி படமும் படுதோல்வியை சந்தித்ததால் பயங்கர அப்செட்டில் இருக்கிறார் சண்முக பாண்டியன். இனிமேல் கதை விஷயத்தில் அம்மா, மாமா யாருடைய பேச்சையும் கேட்காமல் நானே கதையை கேட்டு முடிவு செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்