- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அரசியல் வருகை அதை தான் காட்டுகிறது - வெளிப்படையாக விமர்சனம் செய்த கன்னட...

நடிகர் விஜய் அரசியல் வருகை அதை தான் காட்டுகிறது – வெளிப்படையாக விமர்சனம் செய்த கன்னட நடிகர் கிச்சா சுதீப்!

- Advertisement -

சினிமாவில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டால் அடுத்த நகர்வாக பலரும் அரசியலை தான் பார்க்கின்றனர். அப்படி அரசியலுக்கு வந்தவர்களில் மக்களிடம் பெரிய வரவேற்பை ஆதரவை பெற்றவர்கள் தமிழ் சினிமாவை பொருத்த வரை 2 பேர் மட்டும்தான். ஒருவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். இன்னொருவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ஆகியோர் மட்டும்தான்.

நடிகர்கள் சிவாஜி கணேசன் கமல்ஹாசன் டி ராஜேந்தர் கே பாக்யராஜ் சரத்குமார் நவரச நாயகன் கார்த்திக் மன்சூர் அலிகான் கர்ணாஸ் என பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த போதிலும் சினிமாவில் கிடைத்த வரவேற்பும் ஆதரவும் அரசியல் களத்தில் அவர்களுக்கு மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

- Advertisement -

ஆனால் இப்போது நடிகர் விஜய்க்கு தமிழக மக்கள் மத்தியில் அரசியல் களத்தில் நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. அவர் செல்கிற இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலை அலையாக திரண்டு வருகிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகும் விஜய்க்கான மக்களின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம்.

ஆனால் இந்த கூட்டம் எல்லாமே வருகிற சட்டசபை தேர்தலில் ஓட்டுகளாக மாறுமா, விஜயின் தமிழக முதல்வர் கனவு நிறைவேறுமா என்பதற்கு தேர்தல் முடிவுகள்தான் பதில் சொல்ல வேண்டும். இந்த சூழலில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிகர் விஜய் குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

கன்னட திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர ஹீரோவாக வலம் வருபவர் கிச்சா சுதீப். தமிழில் புலி படத்தில் நடிகர் விஜயுடன் நடித்திருக்கிறார். இப்போது அவர் ஹீரோவாக நடித்த மார்க் படம் தமிழில் தற்போது ரிலீசாகி உள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கிச்சா சுதீப் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றது குறித்து பேசியிருக்கிறார்.

அப்போது நடிகர் கிச்சா சுதீப் கூறியதாவது, ஒரு பெரிய நட்சத்திரம் அரசியலுக்கு வருவது மக்கள் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறையை காட்டுகிறது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது அதை விட்டு விட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல என்று கிச்சா சுதீப் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்