கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 9 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு வரை 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பணிசெய்து வருகிறார். விஜய் சேதுபதியும் நல்லவிதமாக நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 9 இப்போது 12 வாரங்களை கடந்து அதாவது 84 நாட்களை கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சான்ட்ரா திவ்யா கணேஷ் கானா வினோத் விக்கல்ஸ் விக்ரம் சுபிக்சா சபரிநாதன் அரோரா பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகிய 9 பேர் விளையாடி வருகின்றனர். கடைசியாக கனி வீட்டை விட்டு வெளியேறினார்.
இதுவரை 8 ஆண்டுகளாக நடந்த பிக்பாஸ் சீசன்களில் குறிப்பிட்ட கால கட்டத்துக்கு பிறகு இந்த சீசனில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான் என்பது ஓரளவுக்கு பார்வையாளர்களுக்கு தெரிந்து விடும். பிக்பாஸ் வீட்டுக்குள் சிலரது நடவடிக்கைகளை கணித்து அதை பார்வையாளர்கள் யூகித்து விடுவார்கள். அந்த அடிப்படையில் இந்த முறை முதலில் கானா வினோத் பெயர்தான் இருந்தது.
ஆனால் இப்போதைய நிலவரப்படி பார்த்தால் இந்த பிக்பாஸ் சீசன் 9 பொருத்த வரை கம்ருதீன் பார்வதி லவ் கன்டென்ட் முட்டல் மோதல் சண்டைகளை வைத்துதான் பிக்பாஸ் பரபரப்பாக விறுவிறுப்பாக ஓடியிருக்கிறது. அவர்களால் தான் 24 மணி நேர லைவ் டெலிகாஸ்ட்டும் டிஆர்பி கூடியிருப்பதாக தெரிகிறது. அதனால் பார்வையாளர்களின் கானா வினோத் குறித்த கணிப்பு இந்த முறை பொய்யாக அதிக வாய்ப்புள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்துக்கொண்டு பிக்பாஸ் சொல்லும் அறிவுரைகளை கேட்காமல், விதிமுறைகளை பின்பற்றாமல் சக போட்டியாளர்களை துச்சமாக நடத்தும் கேரக்டர் கொண்ட பார்வதி தான் இப்போதைக்கு பெரிய அளவில் கவனம் பெற்றிருக்கிறார். பார்வையாளர்கள் பார்த்தவுடன் வெறுப்படையும் கடுப்பாகும் ஒரு கேரக்டரில் பிக்பாஸ் வீட்டுக்குள் பார்வதி இருந்து வருகிறார்.
அவரது நாடகத்தனமான பேச்சும் நடிப்பும் வெளிப்படும் வன்மமும் சக போட்டியாளர்களிடம் காட்டும் கோபமும் தான் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அதனால் இந்த பிக்பாஸ் சீசனை பொருத்த வரை டைட்டில் வின்னராக பார்வதி அல்லது கம்ருதீன் இருவரில் ஒருவர்தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வீட்டுக்குள் ஒரு நேரத்தில் காதல் ஜோடியாகவும் இப்போது எலியும் பூனையுமாக மாறியுள்ள கம்ருதீன் பார்வதி இருவரில் ஒருவருக்கு தான் டைட்டில் வின்னர் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.





