- Advertisement -
Homeபொழுதுபோக்குபுத்தாண்டு வாழ்த்துகளை இந்த முறை வித்யாசமாக தெரிவித்த சூப்பர் ஸ்டார் - தலைவா… என குதூகலித்த...

புத்தாண்டு வாழ்த்துகளை இந்த முறை வித்யாசமாக தெரிவித்த சூப்பர் ஸ்டார் – தலைவா… என குதூகலித்த ரசிகர்கள் – கமலும் தன் பங்குக்கு அசத்தியிருக்கிறாரே?

- Advertisement -

இன்று 2026ம் ஆண்டு புத்தாண்டு பிறந்திருக்கிறது. இந்த நல்ல நாளில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை அவரது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நேரில் வந்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது அங்கு இருந்த ரசிகர்களில் சிலர் ரஜினிக்கு பட்டு வேட்டியும் விவேகானந்தர் சிலையை புத்தாண்டு பரிசாக வழங்கினா். அதை மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றிகளை சொன்னார். பிறகு ரசிகர்களை பார்த்து கைகூப்பி வணங்கிய அவர் கையசைத்து விட்டு வீட்டுக்குள் சென்றார்.

- Advertisement -

அதன்பிறகு ரஜினிகாந்த் திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து நடிகர் கெளதம் ராம் கார்த்திக் நடித்துள்ள ரூட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளை இந்த முறை வித்யாசமாக கூறியிருக்கிறார். முத்து படத்தில் ரஜினியும் மீனாவுடன் குதிரை வண்டியில் செல்லும் ஒரு காட்சியை அதில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் மீனாவிடம் பேசும் ரஜினிகாந்த், நான் போற ரூட்டை பத்தி எப்பவுமே கவலைப்பட்டது கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ அதுல சிவான்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான் என்கிற காட்சியை அதில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், ராஜ்ய சபா எம்பி நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், துரித உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செல்போன் பார்ப்பதை குறைக்க வேண்டும். நல்ல தூக்கம் ஆரோக்கியம் வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தனது அன்பை கூறியிருக்கிறார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்