கடந்த ஆண்டை பொருத்த வரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது என்று சொல்லலாம். ஏனென்றால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல முக்கிய படங்கள் மிக மோசமான தோல்வி படங்களாக இருந்தன. இதில் சில படங்கள் வசூலை அள்ளினாலும் விமர்சன ரீதியாக படுமொக்கையான படங்கள் என்ற கடும் விமர்சனங்களை சந்தித்தன.
தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 300 படங்கள் வரை வெளியான நிலையில் 10க்கும் குறைவான படங்களே வெற்றிப் படங்கள் என்று சொல்லப்பட்டன. அதிலும் ஸ்டார் வேல்யூ காரணமாக சில இயக்குனர்கள் சில நட்சத்திர நடிகர்கள் படங்களாக மட்டுமே அவை வணிக ரீதியாக பெரிய லாபத்தை கொடுத்தன.
அந்த வகையில் கூலி தக்லைஃப் குட் பேட் அக்லி தலைவன் தலைவி போன்ற படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளினாலும் விமர்சன ரீதியாக தோல்வி படங்கள்தான். அதே நேரத்தில் குடும்பஸ்தன் மதகஜ ராஜா மாமன் 3 பிஎச்கே சிறை போன்ற படங்கள் சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் கதையம்சம் நிறைந்த படங்களாக ரசிகர்களுக்கு நிறைவை தந்து வெற்றி பெற்றன.
இந்த 2026ம் ஆண்டில் பல முக்கிய திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. அதில் பிளாக்பஸ்டர் படங்களாக அவை இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஆவலும் ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. அதுகுறித்து இப்போது பார்க்கலாம். நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிரெய்ன் போன்ற படங்கள் இந்த ஆண்டில் வெளியாக உள்ளன.
அதே போல் நடிகர் ரவிமோகன் நடித்த ஜீனி நடிகர் கார்த்தி நடித்த சர்தார் 2 நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி நடிகர் சூர்யா நடித்த கருப்பு நடிகர் சிம்பு நடித்த அரசன் நடிகர் விஷால் நடித்த மகுடம் அதே போல் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 4
ஆகிய படங்களும் இந்த ஆண்டில் ரிலீஸாக உள்ளன.
இந்த ஆண்டில் பெரிய நட்சத்திரங்கள் நடித்த மொத்தம் 12 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. மேலும் நெல்சன் எச் வினோத் சுதா கொங்கரா வெற்றிமாறன் சுந்தர் சி போன்ற நட்சத்திர இயக்குனர்களின் படங்களாகவும் சில இருக்கின்றன. அதனால் இந்த முறை பெரிய ஹிட் படங்கள் களத்தில் இருக்கும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.





