- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தின் மொத்த நீளம் என்ன…? படத்தில் அந்த விஷயம் உண்மையா? டிரெய்லர் ரிலீஸ்...

ஜனநாயகன் படத்தின் மொத்த நீளம் என்ன…? படத்தில் அந்த விஷயம் உண்மையா? டிரெய்லர் ரிலீஸ் எப்போது…? லேட்டஸ்ட் அப்பேட் இதுதான்!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி ரிலீஸாகிறது. தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் தான் ஜனநாயகன் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் இயக்குனர் எச் வினோத் இந்த தகவலை முற்றிலும் மறுக்கவில்லை.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களை அழ வைக்கும். இதுவரை விஜய் நடித்த 68 படங்களில் இருந்தும் முக்கிய காட்சிகள் பாடல் காட்சிகள் ஜனநாயகன் படத்தின் கிளைமாக்ஸில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் படத்தின் கடைசி 20 நிமிட காட்சியை பார்த்து தளபதி ரசிகர்களை மனம் கலங்கி அழ அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

- Advertisement -

அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படி சென்ட் ஆப் தருவது போல ஜனநாயகன் படத்தில் தொகுப்பு ஒன்று சேர்க்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் அப்படி எதுவும் கிளைமாக்ஸில் கிடையாது. இந்த படத்தின் மொத்த நீளமே 3 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27ம் தேதி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கித் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இங்கு திரண்டிருந்தது பெரிய அளவில் கவனம் பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதற்காக தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஆங்கில புத்தாண்டு நாளில் டிரெய்லர் வெளியாகததால் தளபதி ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.

இசையமைப்பாளர் அனிருத் டிரெய்லருக்கான பிஜிஎம் இசையை தரவில்லை. மலேசியாவில் விழாவில் அவர் பிஸியாக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. நாளை 3ம் தேதி மாலை 6.45 மணிக்கு ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று போஸ்டர் வெளியிடடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்