தக்லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிக்கிறார். வடசென்னை படத்தின் கிளை கதையாக இந்த படத்தின் கதைக்களம் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் பிரமோ ஷூட்டும் சமீபத்தில் நடத்தப்பட்டது.
ஆனால் அதற்கு பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் துவங்கப்படவில்லை. நடிகர் சிலம்பரசன் வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் இந்த படப்பிடிப்பை துவங்குவதற்கான அறிகுறியே இதுவரை கோலிவுட்டில் காணப்படவில்லை. இந்த படத்தின் பட்ஜெட் 150 கோடி ரூபாய் என்றும் சிலம்பரசன் அதிக சம்பளம் கேட்கிறார் என்றும் தகவல்கள் இருந்து வருகின்றன.
இதற்கிடையே இந்த படம் குறித்த ஒரு முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த புதிய படத்தில் நடிக்க நடிகர் சிலம்பரசன் ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் என 3 மாதங்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்திருக்கிறார். இப்போது ஆகஸ்ட் மாதம் 12 நாட்களை கடந்த நிலையில் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை.
இப்படியே இந்த மாதம் போய்விட்டாலும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் என 2 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த 2 மாதங்களுக்குள் இந்த படத்தில் நடிக்க வேண்டிய சிம்புவின் காட்சிகளை எடுத்து முடிக்க வேண்டிய நெருக்கடியும் சிக்கலும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு உள்ளது.
அவர் ஏற்கனவே மாதக்கணக்கில் எடுத்த காட்சிகளை ரஷ் பார்த்து திருப்தி இல்லை என்றால் தூரமாக அவற்ளை மொத்தமாக தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் புதிதாக ஸ்கிரிப்ட் எழுதி படம் எடுக்கும் ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். அப்படித்தான் விடுதலை 2 படம் பல மாதங்களாக ஷூட்டிங் இழுத்துக்கொண்டே போய் ஒருவழியாக எடுத்து முடிக்கப்பட்டது. இவர் சிம்பு படத்தை 2 மாதங்களில் எடுத்து முடிப்பது கேள்விக்குறிதான்.
அதே நேரத்தில் இந்த படத்தை முடித்துவிட்டு டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்துக்கு வருகிற நவம்பர் மாதம் முதல் சிம்பு கால்ஷீட் தந்திருக்கிறார். அதற்கான ப்ரீ புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதனால் வெற்றிமாறன் வருகிற அக்டோபர் இறுதிக்குள் இந்த படத்தை எடுத்து முடிப்பாரா, அல்லது வருகிற அக்டோபர் வரை இரண்டரை மாதங்களுக்கு சிம்புவுக்கு வீணாக கழியுமா என்பதே குழப்பமாக உள்ளது.





