- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தி படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு… இன்று பரபரப்பு தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்!

பராசக்தி படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு… இன்று பரபரப்பு தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற 10ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த இணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர், பராசக்தி படத்தின் கதை தன்னுடையது என்றும் செம்மொழி என்ற தனது கதையை திருடி பராசக்தி என்ற பெயரில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் எனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

- Advertisement -

மேலும் தனது செம்மொழி கதையையும் பராசக்தி படத்தின் கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் வருண் ராஜேந்திரன் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 2 கதைகளும் ஒன்றுதானா இல்லையா என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி மனு குறித்து ஜனவரி 2ம் தேதி ( இன்று) பதிலளிக்கும்படி பராசக்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

- Advertisement -

மேலும் மனுதாரரின் புகார் குறித்து அனைத்து தரப்பினரையும் விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்யும்படி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் கதை திருட்டு புகார் குறித்து விசாரித்து ஜனவரி 2ம் தேதி (இன்று) அறிக்கை தாக்கல் செய்யும்படி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையில், செம்மொழி படத்தின் கதையை திருடியதாக இணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என பராசக்தி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்துக்கு தடை விதித்தால் பெரிய அளவில் இழப்பும் நஷ்டமும் ஏற்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பராசக்தி படம் தயாரிப்பு குறித்து 2024ம் ஆண்டு தகவல் தெரிந்தும் 2025 டிசம்பர் மாதம்தான் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார் என்று கூறி படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனால் வரும் 10ம் தேதி பராசக்தி படம் வெளியாகும் என்பது உறுதியாகி விட்டது.

- Advertisement -

சற்று முன்