சினிமாவில் இருந்து அரசியல் களத்தில் குதித்த நடிகர் விஜயை ஒரு தரப்பு மக்கள் கொண்டாடி வருகின்றனர். எம்ஜிஆர் விஜயகாந்துக்கு பிறகு அரசியல் களத்துக்கு வந்த சினிமா நடிகர்கள் வரிசையில் விஜய்க்கு தான் நல்ல வரவேற்பு தமிழக மக்களிடம் கிடைத்திருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
வழக்கமாக ஒரு துறையில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வரும்போது அந்த துறை சார்ந்தவர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதுதான் முறை. ஆனால் நடிகர் விஜயை பொருத்த வரை அவர் 33 ஆண்டுகளாக சார்ந்திருந்த சினிமா துறையில் அவருக்கு எந்தவிதமான ஆதரவும் இதுவரை இல்லை.
சில இயக்குனர்கள் சில சின்ன நடிகர்கள் தவிர பெரிய நட்சத்திர நடிகர் நடிகைகள் யாரும் விஜய்க்கு பக்கபலமாக ஆதரவு தரவில்லை. அதே நேரத்தில் சிலர் மிக கடுமையாக விஜய் குறித்து விமர்சித்து வருகின்றனர். விஜய் நடிகராக ஜெயித்த நிலையில் அரசியல் களத்தில் அவரால் ஜெயிக்க முடியாது. அவருக்கு அதற்கான தகுதிகள் இல்லை என்றும் கூறி வருகின்றனர்.
நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் கலைவாரிசாக அறிவிக்கப்பட்டவர். ஆரம்பத்தில் எம்ஜிஆரின் விசுவாசியாக அதிமுகவில் இருந்த அவர் பிறகு அதிமுகவில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் திமுகவுடன் இணக்கமான ஒரு உறவில் இருந்து வருகிறார். திமுக நிகழ்ச்சிகளில் கூட அவ்வப்போது கலந்துக்கொண்டு பேசுகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் பேசியதாவது, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததால் தான் பார்த்திபன் பாண்டியராஜன் போன்றவர்களால் சினிமாவில் வளர முடிந்தது. இயக்குனர்கள் புதிதாக சிந்தித்து செயல்பட வேண்டும். அடுத்தவன் சட்டையை ஆல்ட்ரேஷன் பண்ணி போட்டால் அது நல்லாத்தான் இருக்கும். ஆனால் புதுசாக இருக்காது என்று கே பாக்யராஜ் கூறியிருக்கிறார்.
இயக்குனர் கே பாக்யராஜ் இப்படி கூறியது ஜனநாயகன் படத்தை அட்டாக் செய்துள்ளதாக பலரும் கூறுகிறார்கள். ஏனென்றால் பகவந்த் கேசரி ரீமேக் படமாக ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. இயக்குனர் வினோத் ஆரம்பத்தில் ஒரிஜினலாக சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 ஆகிய படங்களை இயக்கினார். அதனால் நல்ல படைப்பாளியாக கவனிக்கப்பட்டார். அதன்பிறகு மற்ற மொழி படங்களின் கதைகளை படமாக்கி வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருத்தப்படுகின்றனர்.





