- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் எதுக்கு அவர் காலில் விழணும்? மாட்டேன்னு சொல்லிட்டேன்… - முத்தமழை பாடல் வெற்றியால் நெகிழ்ந்து...

நான் எதுக்கு அவர் காலில் விழணும்? மாட்டேன்னு சொல்லிட்டேன்… – முத்தமழை பாடல் வெற்றியால் நெகிழ்ந்து போன பாடகி சின்மயி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் சின்மயி. ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டில் மீ டூ வைரலான போது கவிஞர் மற்றும் சினிமா பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்தது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழ் சினிமாவில் சின்மயிக்கு பாடல் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. டப்பிங் யூனியனில் இருந்தும் சின்மயி நீக்கப்பட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக பாடகி சின்மயி தெலுங்கு சினிமாவில் பாடகியாக டப்பிங் கலைஞராக தொடர்ந்து இருந்து வருகிறார். தமிழில் 6 ஆண்டுகளுக்குப் பின் இப்போது இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் சின்மயிக்கு தக்லைஃப் படத்தில் வாய்ப்பு வழங்கியது அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக மாறியிருக்கிறது.

- Advertisement -

தக்லைஃப் படத்திற்காக முத்த மழை என்ற பாடலை சின்மயி தக்லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பாடினார். இந்த பாடல் பெரிய அளவில் வைரலானது. இந்த பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று பாராட்டுகளை குவித்துள்ளது. இந்த எதிர்பாராத வரவேற்பால் பாடகி சின்மயி நெகிழ்ச்சியான பதிவை செய்திருக்கிறார்.

அதில் பாடகி சின்மயி கூறியிருப்பதாவது, தக்லைஃப் படத்தின் ஆடியோ வெளியீடு விழா வீடியோ வைரலான போது எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. கடந்த 6 ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் எதிர்கொண்டு வரும் தடையை பற்றி உங்களுக்கு தெரியும். இதுகுறித்து எண்ணற்ற கோயில்களில் சென்று நான் கண்ணீர் வடித்துள்ளேன். கடவுளிடம் அழுதுவிட்டு வெளியே வந்ததும் துணிச்சலான பெண் போல நடித்து நடந்துள்ளேன்.

- Advertisement -

என் பிரார்த்தனைகளுக்கு கடவுள் எப்போது செவி சாய்ப்பார் என்று காத்திருந்தேன். முத்தமழை பாடல் வெற்றி என்னுடைய பிரார்த்தனைக்கு கிடைத்த வெற்றி போல உணர்கிறேன். நான் சந்தா கட்டவில்லை என என்னை டப்பிங் யூனியிலிருந்து நீக்கியதாக சொன்னார்கள். ஆனால் உண்மை அது அல்ல. உண்மையான காரணம், நான் மீ டூ வில் பேசியதுதான். அதனால்தான் எனக்கு தடை விதிக்கப்பட்டது.

அந்த தகவல் கடிதம் மூலமாக வந்தது. திரும்ப சேர வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்கணும் என்று சொன்னார்கள். அதுவும் வைரமுத்து காலில் விழவேண்டும் என்ற புரஸீஜர் இருந்தது. அதனால்தான் முடியாது என்று சொல்லி விட்டேன். ஒரு வாரம் முன்பு கூட மன்னிப்பு கடிதம் கொடுக்க சொன்னாங்க. நான் ஏன் தரணும், அதெல்லாம் முடியாது என்று சொல்லி விட்டேன் என்று பாடகி சின்மயி வெளிப்படையாக அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்