- Advertisement -
Homeபொழுதுபோக்குசுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம்… நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு...

சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம்… நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா?

- Advertisement -

பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் நடிகர் விஜய் நடித்த படம் ஜனநாயகன். நேற்று 9ம் தேதி வெளியாக வேண்டிய இந்த படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் ஆகவில்லை. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமோத்த விஜய் ரசிகர்களையும் பலத்த அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சென்சார் போர்டு தரப்பில் உடனடியாக சான்றிதழ் வழங்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மனுதாக்கல் செய்தது. 2 நாட்கள் அடுத்தடுத்து விசாரணை நடத்திய நீதிபதி பிடி ஆஷா நேற்று காலை வழங்கிய தீர்ப்பில் ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்கவும் சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார்.

- Advertisement -

ஆனால் நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜனநாயகன் பட விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தடை விதித்தனர். மேலும் நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வருகிற 24ம் தேதிக்கும் தள்ளி வைத்தனர். அதற்குள் இந்த மேல்முறையீட்டு வழக்குக்கு தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் கே வி என் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை வரும் திங்களன்று 12ம் தேதி அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஒருவேளை சுப்ரீம் கோர்ட் வருகிற 12ம் தேதி வழக்கை ஏற்றுக்கொண்டு ஜனநாயகன் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உடனடியாக ஜனநாயகன் படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி படத்தை தங்கு தடையின்றி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டால் வருகிற 14ம் தேதி தைப் பொங்கல் அன்று ஜனநாயகன் திரைக்கு வர வாய்ப்புள்ளது.

ஒருவேளை வருகிற 12ம் தேதி இந்த மனுவை அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் எடுத்துக்கொள்ளாத பட்சத்திலோ அல்லது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாலும் சென்னை ஐகோர்ட் விதித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க மறுக்கும் பட்சத்திலோ ஜனநாயகன் படம் திரைக்கு வருவதில் இன்னும் சிக்கலும் அதிகரிக்கும். படம் ரிலீஸ் ஆவதில் இன்னும் நாட்களும் தள்ளிப் போகலாம் என்பதால் தளபதி ரசிகர்கள் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்