- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோவாக இருந்தும் வில்லனாக அதற்காக மட்டுமே நடிக்கிறேன் - நடிகர் விஜய் சேதுபதி தந்த ஓபன்...

ஹீரோவாக இருந்தும் வில்லனாக அதற்காக மட்டுமே நடிக்கிறேன் – நடிகர் விஜய் சேதுபதி தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி இப்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அடுத்தடுத்து அவரது படங்கள் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்தாண்டில் அவர் நடித்த தலைவன் தலைவி வெற்றிக்கு பிறகு பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் உருவாக்குவதில் தீவிர முனைப்பு காட்டுகின்றனர்.

இப்போது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ஒருபடம். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ரெட்டி நடிக்கும் ஒரு படத்தில் வில்லன் கேரக்டர் மேலும் மணிரத்னம் இயக்கத்தில் சாய்பல்லவி ஜோடியாக நடிக்கும் ஒரு படம் பிறகு பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு படம் என 4 படங்களில் நடிகர் விஜய் சேதுபதி பிஸியாக இருந்து வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசனிலும் அவர் தொகுப்பாளராக பணிசெய்து வருகிறார். வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களை சந்தித்து பேசுகிறார். ஆனால் வருகிற ஞாயிறு தினத்துடன் இந்த சீசன் நிறைவடைய உள்ளது. அன்று டைட்டில் வின்னர் யார் என்பதை விஜய் சேதுபதி அறிவிக்க உள்ளார்.

ஆரம்பத்தில் துணை நடிகராக நடித்து பிறகு கதாநாயகனாக மாறி முன்னணி நட்சத்திர நடிகராக மாறியவர் விஜய் சேதுபதி. நடிகராக மட்டுமின்றி அவர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். கடைசி விவசாயி ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களின் தயாரிப்பாளர் அவர்தான். அத்துடன் பல படங்களில் கேமியோ ரோல் மற்றும் வில்லன் கேரக்டர்களிலும் அவர் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இனிமேல் வில்லன் கேரக்டர்களிலும் கேமியோ ரோல்களிலும் நடிக்க மாட்டேன். இது படம் பார்க்க வரும் என்னுடைய ரசிகர்களை ஏமாற்றமடைய செய்கிறது என்றும் விஜய் சேதுபதியே கூறியிருந்தார். ஆனால் இப்போது ஜெயிலர் 2 படத்திலும், தெலுங்கு படம் ஒன்றில் அவர் வில்லனாக நடித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, எனக்கு ரஜினி சாரை ரொம்பவும் பிடிக்கும். அவருடன் இருக்கும் போது நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். தற்போது அவருடன் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறேன். எனக்கு பிடித்த கதையில் மட்டுமே வில்லன் அல்லது கேமியோ ரோலில் நடிக்கிறேன். நான் பல கதைகளை கேட்டேன். பலர் என்னிடம் ஹீரோவை முன்னிலைப்படுத்தும் வழக்கமான வில்லன் கேரக்டர்களை கொண்டு வருகிறார்கள். அதை நான் செய்ய விரும்பவில்லை என்று நடிகர் விஜய்சேதுபதி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்