- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீர் சர்ச்சையில் சிக்கிய நடிகர் அஜீத்குமார்… அவர் பாசிட்டிவாக நெனைச்சது இப்போ நெகட்டிவா மாறி இப்படி...

திடீர் சர்ச்சையில் சிக்கிய நடிகர் அஜீத்குமார்… அவர் பாசிட்டிவாக நெனைச்சது இப்போ நெகட்டிவா மாறி இப்படி ஆப்பு வெச்சிடுச்சே…?

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத்குமார். சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் திரைப்படங்களி்ல் நடிக்க வந்து இன்று முன்னணி நட்சத்திர நடிகராக தனது உழைப்பால் உயர்ந்தவர் நடிகர் அஜித்குமார் என்றால் அது மிகையல்ல. ஆனால் சமீப காலமாக அவரது செயல்பாடுகள் ஏகே ரசிகர்களுக்கே கடும் அதிர்ச்சியை விரக்தியை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் அஜீத்குமாரை வைத்து படம் இயக்கவும் தயாரிக்கவும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தவம் இருக்கிற சூழ்நிலையில் அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு கார் ரேஸ் பைக் ரேஸ் என்று ஆர்வம் காட்டுவது அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து வருகிறது. கடந்த ஆண்டு முழுவதும் அஜீத் குமார் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

- Advertisement -

கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் கார் ரேஸ்க்காகவே அவர் 12 மாதங்களையும் ஒதுக்கி விட்டார். இந்த சூழ்நிலையில் அவரது அடுத்த படம் ஏகே 64 படப்பிடிப்பு துவங்குவதற்கான எந்தவித அறிவிப்பும் இதுவரை இல்லை. பொங்கலுக்கு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிங்கியது. குட்பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் தனது 64வது படத்தில் நடிக்க 186 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதுதான் அவரது படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வராததற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த 2026ம் ஆண்டிலும் அஜீத் குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்குமா, இல்லையா என்பது தெரியவில்லை. இந்த ஆண்டிலும் முழுக்க முழுக்க கார் ரேஸ்க்கு ஏகே சென்று விடுவாரா என்ற குழப்பத்தில் அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நடிகர் அஜீத்குமார் குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த விளம்பரம் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் உச்சகட்ட விரக்திக்கு சென்று விட்டனர். சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் இப்படி விளம்பர படத்தில் நடித்திருக்கறாரே என்ற கடுப்பு பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அதுவும் குளிர்பானம் என்பது மெல்ல மெல்ல கொல்லும் ஒரு விஷம் என்று பலரும் கூறிவரும் நிலையில் விஷப் பொருளின் விளம்பரத்தில் அஜீத்குமார் நடித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது அஜீத்குமார் மீது கடும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக நடிகர் அஜீத்குமார் அவர் ஹீரோவாக நடித்த படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. ஆனால் விளம்பரப் படத்தில் அதுவும் குளிர்பான விளம்பரத்தில் அவர் நடித்திருப்பது சமூக கேடான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. தன்னை சினிமாவில் பார்க்கா விட்டாலும் விளம்பரத்தில் பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள் என்று பாசிட்டிவாக நினைத்த அஜீத்குமாருக்கு இப்போது அந்த விளம்பர படமே நெகட்டிவ் ஆக மாறிவிட்டது.

- Advertisement -

சற்று முன்