- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசி நேரத்தில் விஜய் படத்துக்கு சென்சார் சிக்கல் வந்ததே ஜனநாயகன் படக்குழுவினரால் தான் - வெளிச்சத்துக்கு...

கடைசி நேரத்தில் விஜய் படத்துக்கு சென்சார் சிக்கல் வந்ததே ஜனநாயகன் படக்குழுவினரால் தான் – வெளிச்சத்துக்கு வந்த பகீர் உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களை காட்டிலும் விஜய் படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியது. குறிப்பாக விஜய் நடித்த மாஸ்டர் வாரிசு பீஸ்ட் லியோ தி கோட் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி படங்களாக இருந்த போதிலும் வசூல் ரீதியாக வணிக அளவில் அது பெரிய வெற்றிப் படங்களாக பார்க்கப்பட்டன.

அதற்கு காரணம் நடிகர் விஜய் மீது மக்களுக்கு உள்ள அபரிமிதமான ஆர்வம்தான். அதனால் அவரது படம் எப்படியிருந்தாலும் ஒருமுறையாவது படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து விடுகின்றனர். அதனால்தான் நடிகர் விஜய் தொடர்ந்து வசூல் சக்கரவர்த்தியாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத் தலைவராக மாறிய அவர் கடைசியாக நடித்துள்ள படம் ஜனநாயகன். இந்த படத்துடன் அவர் சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து முழுநேரமும் அரசியல் களத்தில் பணியாற்ற உள்ளதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியல் களத்திலும் ஒரு முக்கியமான படமாக உள்ளது.

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025ம் ஆண்டு மே மாதமே நிறைவடைந்து விட்டது. அதன்பிறகு 6 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம்தான் இந்த படத்தை சென்சார் போர்டுக்கு தணிக்கை செய்ய அனுப்புவதற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தின் இயக்குனர் எச் வினோத் முன்வந்துள்ளனர். கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு எங்களுக்கு சான்று தருமாறு நெருக்கடி தருகின்றனர் என்று வாதத்தை சென்சார் போர்டு கோர்ட்டில் முன்வைக்க இதுவே முக்கிய காரணமாகி விட்டது.

- Advertisement -

நடிகர் விஜய் அரசியல் தலைவராக மத்திய அரசை மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நிச்சயமாக அவர் கடைசியாக நடித்த ஜனநாயகன் படத்துக்கு மத்திய அரசால் குறிப்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்சார் போர்டு மூலம் படத்துக்கு ஏதேனும் சிக்கல் இடையூறு வரலாம் என்பதை முன்பே படக்குழு கணித்து யோசித்து செயல்பட்டு இருக்க வேண்டும்.

அதனால் மே மாதம் படம் முடிவடைந்த நிலையில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பி சான்றிதழ் பெற்றிருக்கலாம். அப்போது பல காரணங்களால் படம் தணிக்கை செய்ய தாமதம் ஏற்பட்டு இருந்தாலும் அறிவித்தபடி பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்திருக்கலாம். படத்தை எடுத்து முடித்து விட்டு தணிக்கை சான்றிதழ் பெறாமல் டிசம்பர் மாதம் வரை படத்தை ஆறப் போட்டு வேடிக்கை பார்த்ததுதான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் என்று படக்குழு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்