- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படம், லேட்டஸ்ட் அப்டேட் தந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் -...

நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படம், லேட்டஸ்ட் அப்டேட் தந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் – அந்த படம் மாதிரி கண்டிப்பா இருக்காதாம்…!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருந்தார். கடந்தாண்டில் இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. வணிக ரீதியாகவும் நல்ல லாபத்தை கொடுத்தது. அதனால் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே அஜீத் கொடுத்து விட்டார்.

கடந்த ஆண்டு முழுவதும் நடிகர் அஜீத்குமார் பல நாடுகளில் தொடர்ந்து நடந்த கார் ரேஸில் ஆர்வமாக கலந்துக்கொண்டார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராக அவர் செயல்பட்டார். அதனால் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை ஓராண்டு காலம் தள்ளி வைத்த நிலையில் கார் ரேஸில் முழு ஈடுபாடு காட்டினார்.

- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஏகே 64 படத்துக்கு அனிருத் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை படத்தின் தயாரிப்பாளர் யார் என முடிவாகாமல் இந்த படத்தின் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் உள்ளது.

ஆனால் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் துவங்கும் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தொடர்ந்து கூறி வருகிறார். அதே நேரத்தில் ஏகே 64 படம் குறித்த சில லேட்டஸ்ட் அப்டேட்டுகளையும் அவர் இப்போது கூறியிருக்கிறார். இதுகுறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, வரும் பிப்ரவரி மாதத்தில் ஏகே 64 படத்தின் ஷூட்டிங்கை துவங்க இருக்கிறோம்.

- Advertisement -

படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாகும். நான் முன்பு எடுத்த குட் பேட் அக்லி படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டது. நானும் அவரது தீவிர ரசிகன் என்கிற முறையில் அந்த படம் ரசிகர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அஜீத்குமாரின் படமாக மட்டுமே இருந்தது. ஆனால் ஏகே 64 படம் அந்த படம் போல நிச்சயமாக இருக்காது.

இனி நான் எடுக்கப்போகும் ஏகே 64 படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி ரசிக்கக்கூடிய ஒரு படமாக தான் இருக்கும். அந்த விதமாக தான் இந்த படம் உருவாக போகிறது. அது மட்டுமின்றி இந்த படத்தில் புதிதாக நிறைய சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு இருக்கப் போகிறது என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்