- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் மனநலம் பாதிக்கப்பட்டவனா? அவர் படமே சாக்கடை என்று சொல்லிவிடும் - பிரபல இயக்குனரை...

நான் மனநலம் பாதிக்கப்பட்டவனா? அவர் படமே சாக்கடை என்று சொல்லிவிடும் – பிரபல இயக்குனரை விளாசித் தள்ளிய இயக்குனர் ராஜகுமாரன்!

- Advertisement -

பார்த்திபன் தேவயானி அஜீத்குமார் நடித்த நீ வருவாய் என படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜகுமாரன். அடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் திருமதி தமிழ் காதலுடன் ஆகிய 3 படங்களை இயக்கினார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் காமெடி ரோலிலும் கடுகு படத்தில் முக்கிய கேரக்டரிலும் ராஜகுமாரன் நடித்தார்.

திருமதி தமிழ் படத்தில் தேவயானி நாயகியாகவும் ராஜகுமாரன் ஹீரோவாகவும் நடித்திருந்தனர். நீ வருவாய் என ஒரு படத்தை தவிர மற்ற 3 படங்களும் தோல்வி படங்களாக இருந்தன. இப்போது சினிமாவில் வாய்ப்பில்லாத நிலையில் இயக்குனர் ராஜகுமாரன் யூடியூப் சானல்களில் பல நேர்காணல்களில் பேசி வருகிறார்.

- Advertisement -

நடிகர்கள் கமல்ஹாசன் சியான் விக்ரம் துருவ் விக்ரம் இயக்குனர் மகேந்திரன் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த இயக்குனர் ராஜகுமாரன் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். ஜெயிலர் எல்லாம் ஒரு படமே இல்லை. ப்ளு பிலிம் படம் கூட நிறைய வசூல் பண்ணும் என்றும் பேசியிருந்தார்.

மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, நடிகர் சசிக்குமார் இயக்குனர் அமீரும் நல்ல நண்பர்கள். இயக்குனர் சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம். ஆனால் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியுமா? அந்த படத்தில் கார்த்தி சரவணன் என எல்லாருமே நல்ல கதாபாத்திரங்கள் இல்லை.

- Advertisement -

ஒரு மேன்மையான கதாபாத்திரத்தை கொடுக்காமல் இருப்பதை அப்படியே கொடுக்கிறேன் என்று சொல்வது சாக்கடை. அது சாக்கடையாக இருந்தாலும் அதை சுத்தம் செய்து நல்ல படைப்பாக கொடுப்பதுதான் ஒரு இயக்குனரின் கடமை. நான் அவரை விமர்சித்து பேசியதற்காக அமீர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று பேசியிருக்கிறார்.

அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஒரு நபர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது படைப்பே சொல்லிவிடும். இதே கருத்தை சசிகுமார் ஒருபோதும் சொல்ல மாட்டார். இதுதான் சசிகுமாருக்கும் அமீருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்று இயக்குனர் ராஜகுமாரன் அந்த நேர்காணலில் பேசி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்