- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரவி மோகன் நடிக்கும் அடுத்த படம்… மீண்டும் அதே இயக்குனருடன் கை கோர்க்கிறாரா? -...

நடிகர் ரவி மோகன் நடிக்கும் அடுத்த படம்… மீண்டும் அதே இயக்குனருடன் கை கோர்க்கிறாரா? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

ஜெயம் படத்தில் அறிமுகமான நடிகர் ரவி அந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். ஆனால் அவர் சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். மனைவி ஆர்த்தியை பிரிந்த அவர் இப்போது பாடகி கெனிஷா என்பவருடன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

பல வெற்றிப் படங்களை தமிழில் கொடுத்த நடிகர் ரவி மோகன் கடைசியாக நடித்த படம் பராசக்தி. இந்த படத்தில் அவர் வில்லன் கேரக்டரில் மிகவும் அற்புதமான நடிப்பை தந்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அதர்வா கதாபாத்திரங்களை விட அதிக கவனம் பெற்றவர் ரவிமோகன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தி மொழி திணிப்புக்கு எதிரான இந்த படத்தின் கதைக்களத்தில் ஹீரோவை எதிர்க்கும் வில்லனாக நடிகர் ரவி மோகன் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். போலீஸ் அதிகாரியாக அவரது வில்லன் நடிப்பு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரவி மோகன் நடித்த ஜீனி கராத்தே பாபு ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இதுதவிர அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் 2 படங்களை தயாரித்து வருகிறார். அத்துடன் நடிகர் யோகிபாபு நடிக்கும் ஒரு படத்தை நடிகர் ரவி மோகனே டைரக்ட் செய்வதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் ரவி மோகன் நடிக்கும் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் நானி ஹீரோவாக நடிக்க கமிட் ஆன ஒரு கதையில் நானிக்கு பதிலாக நடிகர் ரவிமோகன் நடிக்கிறார் என்பதும் இதில் லேட்டஸ்ட் அப்டேட்டாக உள்ளது.

பராசக்தி படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த வணிக ரீதியான வெற்றிப் படமாக இருந்தாலும் விமர்சன ரீதியாக அது தோல்வி படம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டக்களத்தில் அழுத்தமான காட்சிகளை அவர் கொண்டுவரவில்லை என்பது ரசிகர்களின் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. இந்த சூழலில் இந்த படத்தில் நடித்த ரவி மோகனே மீண்டும் அவரது இயக்கத்தில் அடுத்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்