- Advertisement -
Homeபொழுதுபோக்குதடையை மீறி அண்ணமலையார் மலை உச்சிக்கு சென்ற பிக்பாஸ் நடிகை, இறங்கி வர சிரமப்பட்டதாக அவரே...

தடையை மீறி அண்ணமலையார் மலை உச்சிக்கு சென்ற பிக்பாஸ் நடிகை, இறங்கி வர சிரமப்பட்டதாக அவரே வெளியிட்ட பதிவு – வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!

- Advertisement -

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்று திருவண்ணமாலையில் உள்ள அண்ணாமலையார் கோவில். இங்குள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவது பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடனாக உள்ளது. இங்குள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த மலை முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நாட்களில் மட்டுமே அண்ணாமலையார் மலை மீது செல்ல குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு மட்டுமே கோவில் நிர்வாகம் தரப்பிலும் வனத்துறை தரப்பிலும் அனுமதி தரப்படுகிறது. மற்ற நாட்களில் இந்த மலைக்கு யாரும் செல்லக் கூடாது. இது சட்டப்படி குற்றமாகும்.

- Advertisement -

இந்நிலையில் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன். இவர் டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட சில பட்ஙகளில் நடித்தும் இருக்கிறார். கடந்த 2023ம் ஆண்டில் விஜய் டிவி பிக்பாஸ்
நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராகவும் இவர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் சில தினங்களுக்கு முன்பு வனத்துறையின் அனுமதி பெறாமல் தடை மீறி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை உச்சி வரை ஏறிச் சென்று திரும்பி வந்துள்ளார். அவர் அங்கு மலைப்பகுதியில் எடுத்த புகைப்படங்களையும் தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

மேலும் அந்த பதிவில், அண்ணாமலையார் மலையை ஏறி இறங்க மிகவும் சிரமப்பட்டதாகவும் இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் அச்சம் அடைந்ததாகவும் அர்ச்சனா குறிப்பிட்டுள்ளார் மேலும் அந்த பதிவில் அர்ச்சனா ரவிச்சந்திரன் கூறுகையில், மலை ஏற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள். எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு இறங்குவதை திட்டமிடுங்கள் என்றும் அறிவுரை வழங்கி உள்ளார்.

திருவண்ணாமலையில் புனிதம் மிக்க அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி தடை மீறி ஏறிச் சென்ற அவர் பிறரையும் அதே போல் மலையேற ஊக்குவிப்பது போன்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை பகுதி வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரும் அவரும் சென்றவர்கள் யார் என்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்