- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளிக்கு வரப்போறது பிரதீப் ரங்கநாதன் நடித்த அந்த படம்தான்… அப்போ அவர் நடித்த மற்றொரு படம்...

தீபாவளிக்கு வரப்போறது பிரதீப் ரங்கநாதன் நடித்த அந்த படம்தான்… அப்போ அவர் நடித்த மற்றொரு படம் ரிலீஸ் எப்போ? – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். பிறகு லவ் டுடே என்ற படத்தை டைரக்ட் செய்த அவர் அந்த படத்தில் நாயகனாகவும் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். கோமாளி படத்தில் கெஸ்ட் ரோலில் வந்த அவர் பிறகு லவ்டுடே படத்தில் கதாநாயகனாக மாறி மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றார்.

பிறகு ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்தார். இந்த படமும் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்தது. 3 தொடர் வெற்றிகளை பெற்ற பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்ற படத்திலும் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான டியூட் படமும் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள எல்ஐகே படமும் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அறிவித்தன. ஒரு ஹீரோ நடித்த 2 படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதிதாக உள்ளது. அதே நேரத்தில் ஒரே நடிகர் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியானால் இதில் ஒரு படம்தான் பெரிய வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில் வரும் தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படம்தான் ரிலீஸாக உள்ளது. எல்ஐகே படத்தை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 18ம் தேதி எல்ஐகே படம் வெளியிடுவதாக படக்குழு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இதை உறுதி செய்துவிட்டது.

- Advertisement -

எல்ஐகே படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால் அது பேராபத்தில் தான் முடியும். எனவே அதை தவிர்க்கும் பொருட்டு மைத்ரி மூவி தயாரிப்பில் இளம் இயக்குனர் கீர்த்தீஸ்வரன் அறிமுகமாகும் டியூட் படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் எல்ஐகே திரைப்படத்தை வருகிற டிசம்பர் 18ம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

வருகிற டிசம்பர் 5ம் தேதி அவதார் படம் வெளியாக உள்ளது. மேலும் டிசம்பர் மாதம் மழைகாலம் என்பதால் சென்னையில் மழை பாதிப்பால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை வெகுவாக குறையும் வாய்ப்பும் உள்ளது. எனினும் வருகிற டிசம்பர் 18ம் தேதி எல்ஐகே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது. ஜனவரி மாதம் பிரபாஸ் விஜய் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் வருவதால் டிசம்பரில் எல்ஐகே ரிலீஸ் என படக்குழு உறுதி செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்