- Advertisement -
Homeபொழுதுபோக்குபோட்ட பிளான் எதுவுமே ஒர்க் அவுட் ஆகலையே? மங்காத்தா ஆட்டத்தில் காணாமல் போன திரௌபதி 2...

போட்ட பிளான் எதுவுமே ஒர்க் அவுட் ஆகலையே? மங்காத்தா ஆட்டத்தில் காணாமல் போன திரௌபதி 2 – மொத்த வசூல் குறித்து வெளியான பகீர் தகவல்!

- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் மோகன்ஜி. தொடர்ந்து திரௌபதி பகாசூரன் போன்ற படங்களை இயக்கினார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் 14ம் ஆண்டு நூற்றாண்டு வரலாற்று பின்னணியில் உருவான திரௌபதி 2 படம் வெளியானது. இந்த படம் சுமார் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக தெரிகிறது.

முதலில் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பிறகு ஜனவரி 23ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. அப்போது விஜய் நடித்த தெறி படம் ரி ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வந்ததால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம் மோகன்ஜி கேட்டுக்கொண்டதால் அவரும் தெறி படம் ரி ரிலீஸ்சை தள்ளி வைத்தார்.

- Advertisement -

ஆனால் திரௌபதி 2 படம் வெளியான அதே 23ம் தேதி நடிகர் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படமும் வெளியானது. அஜீத்குமார் நடித்த 50வது படமான இது 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வந்தததால் அஜீத்குமார் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினர். இதுவரை மங்காத்தா படம் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது.

மங்காத்தா படம் ரிலீஸ் காரணமாக திரௌபதி 2 படத்தின் வசூல் கணிசமாக பாதிக்கபட்டது. இதுகுறித்து இயக்குனர் மோகன்ஜி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மங்காத்தா படம் ரி ரிலீஸ் காரணமாக திரௌபதி 2 படத்தின் வசூல் கணிசமான பாதிப்பை சந்தித்துள்ளது. என்னுடைய படத்தை காண ரசிகர்களே வரவில்லை என்றும் அந்த வீடியோவில் வருத்தமாக கூறியிருந்தார்.

- Advertisement -

உலகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான திரௌபதி 2 படம் இதுவரை ரூ. 2 கோடிக்கு மேல் வசூலை தாண்டவில்லை என்று பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மங்காத்தா படம் ரூ. 20 கோடியும் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் ரூ. 25 கோடியும் வசூலை அள்ளி இருக்கின்றன.

திரௌபதி 2 படத்தின் ரிலீஸ் நாளை பல முறை பக்காவாக திட்டமிட்டு அதற்கேற்ப மற்ற படங்கள் வராத நாட்களில் வெளியிட செய்தார் இயக்குனர் மோகன் ஜி. அதற்காக விஜய் நடித்த தெறி படத்தின் ரி ரிலீஸ்சை கூட தள்ளி வைக்க முயற்சித்தார். ஆனால் கடைசியில் மங்காத்தாவில் அஜீத்குமார் போட்ட ஆட்டமும் ஜீவாவின் டிடிடி வருகையும் திரௌவுபதி 2 படத்தை ரசிகர்களிடம் இருந்து மறைத்து விட்டது.

- Advertisement -

சற்று முன்