- Advertisement -
Homeபொழுதுபோக்குகேமராவை ஆஃப் பண்ணிட்டு பேட்டி தருகிறார்… விஜய் மிகவும் கோழைத்தனமானவர் - விளாசித் தள்ளிய சினிமா...

கேமராவை ஆஃப் பண்ணிட்டு பேட்டி தருகிறார்… விஜய் மிகவும் கோழைத்தனமானவர் – விளாசித் தள்ளிய சினிமா பிரபலம்!

- Advertisement -

சினிமா துறையில் இருந்து வரும் நடிகர்களுக்கு மக்களிடம் கிடைக்கும் அபரிமிதமான ஆதரவும் வரவேற்பும் அவர் பல ஆண்டுகளாக சார்ந்திருந்த சினிமா துறையிடம் கிடைப்பதில்லை. நடிகர் விஜய் 33 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்தவர். பல நடிகர் நடிகைகள் அவருடன் நடித்திருக்கின்றனர். பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவரது படங்களை உருவாக்கி உள்ளனர்.

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த பிறகு ஸ்ரீமன் தாடி பாலாஜி போன்ற சில துணை நடிகர்கள்தான் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நெல்சன் லோகேஷ் கனகராஜ் அட்லி போன்றவர்கள் மட்டுமே வாழ்த்து கூறினர். மற்றபடி ரஜினி கமல் போன்றவர்கள் கூட செய்தியாளர்கள் அதை கேள்வியாக கேட்ட போது வாழ்த்துகள் என்று மட்டுமே கூறினர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தமிழ் சினிமா சார்ந்த சில நடிகர்கள் நடிகைகள் தவெக தலைவரான நடிகர் விஜய்க்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதில் மிக முக்கியமானவர் நடிகர் எஸ்வி சேகர். அவர் திமுக ஆதரவாளராக இருப்பதால் தொடர்ந்து விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். வருகிற தேர்தல் விஜய்க்கு வாய்ப்பில்லை என்று உறுதியாக அவர் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் எஸ்வி சேகர் கூறியதாவது, தவெக எனக்கும் திமுகவுக்கும் போட்டி என்கிறது. இது தாத்தா போட்டிக்கு வர்றியா என்று என் பேரன் என்னை அழைப்பது போல உள்ளது. அவர் இன்னும் பனையூரை விட்டே வெளியே வரலே. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் காரைக்குடி என்று டிசம்பர் மாதத்தில் இருந்தே சுற்றுப் பயணம் ஆரம்பிச்சிட்டார்.

- Advertisement -

தினமும் பல ஊர்களுக்கு ஸ்டாலின் பயணம் செய்கிறார். அந்த பஃயர் உள்ளுக்குள்ள இருக்கணும். விஜய்கிட்ட அது இல்லை. நான் ஜெயிச்சுடுவேன். எங்களுக்கு வீட்டுக்கு ஒரு ஓட்டு இருக்குது. இதென்ன குப்பை தொட்டியா? வீட்டுக்கு ஒரு குப்பை தொட்டி இருக்கிறதுக்கு? எப்படி வீட்டுக்கு ஒரு ஓட்டு இருக்கும்?

பசங்க ஆர்வமா இருப்பாங்க. ஆனா அவங்க எல்லாம் வந்து ஓட்டு போட மாட்டாங்க. சும்மா அன்னிக்கு விசில் அடிச்சு வர்ற ஓட்டையும் கெடுத்துடுவாங்க. சினிமா வேற அரசியல் வேற. கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறவே மாறாது. உள்கட்டமைப்பு இல்லை. அரசியல் அனுபவம் இல்லை. உலகத்திலேயே கேமராவை ஆஃப் பண்ணிட்டு பேட்டி கொடுத்த ஒருவர் கோழைத்தனமானவர் விஜய்தான் என்று நடிகர் எஸ்வி சேகர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்