- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி… அதுவும் அந்த கேரக்டரிலா? - ஆச்சரியப்பட்ட...

பாலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி… அதுவும் அந்த கேரக்டரிலா? – ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் துணை நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அவரை இயக்குனர் சீனு ராமசாமி ஹீரோவாக நடிக்க வைத்தார். தொடர்ந்து ரம்மி சூது கவ்வும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து தனக்கான ஒரு அடையாளத்தை ரசிகர்களிடம் விஜய் சேதுபதி பெற்றார்.

குறிப்பாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. அடுத்து பீட்சா கருப்பன் தர்மதுரை பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களால் அவர் முன்னிலை நடிகராக மாறினார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழில் ரஜினியுடன் பேட்ட கமலுடன் விக்ரம் விஜயுடன் மாஸ்டர் இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பிற மொழி படங்களிலும் வில்லன் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி தயாராகி விட்டார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தி படம் ஒன்றில் ஜவான் படத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் டங்கல். நடிகர் அமீர்கான் நடித்த இந்த படம் 2000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்த முதல் இந்திய படம் என்று சொல்லப்படுகிறது.

இந்த டங்கல் படத்தின் இயக்குனர் நித்திஷ் திவாரி. அவர் தற்போது இராமாயணம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் கேஜிஎஃப் நாயகன் யஷ் நாயகனாகவும் நடிகை சாய்பல்லவி நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ரன்வீர் கபூரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் விபீஷணன் என்ற கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்காக கமிட் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்