- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படம் வெற்றிக்கு பின் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் கமிட் ஆன நடிகர் சூர்யா -...

கருப்பு படம் வெற்றிக்கு பின் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் கமிட் ஆன நடிகர் சூர்யா – 2வது முறையாக சூர்யாவை இயக்கும் டைரக்டர் அவர்தானா?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியான கருப்பு படம் பிளாக்பஸ்டர் வெற்றியை தந்திருக்கிறது. இதுவரை இந்த படம் 12 நாட்களில் ரூ. 275 கோடி வசூலித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவுக்கு இந்த படம் சூப்பர் கம்பேக் தந்திருக்கிறது. விரைவில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து நடிகர் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். படத்தின் நாயகியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். லக்கி பாஸ்கர் வாத்தி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் வெங்கி அட்லூரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதை தொடர்ந்து நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வரும் படத்தை மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இந்த படத்தை நடிகர் சூர்யாவின் ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்கிறது. இப்படி அடுத்தடுத்த லைன் அப்களில் சூர்யா பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.

- Advertisement -

சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை டைரக்ட் செய்பவர் இயக்குனர் விக்ரம் குமார். இவர் ஏற்கனவே நடிகர் சூர்யா 3 வேடங்களில் நடித்த 24 என்ற படத்தை இயக்கியவர். இந்த படத்தின் திரைக்கதையை எழுதியவரும் இவர்தான். அவர்தான் அடுத்து சூர்யாவுடன் இணைய உள்ளார்.

கடந்த 13 ஆண்டுகளில் நடிகர் சூர்யா நடித்த 24 படம் கடந்த 2016ம் ஆண்டில் வெளியானது. இதில் சமந்தா நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்பா மகன் சித்தப்பா என்ற 3 கேரக்டர்களில் சூர்யா நடித்திருந்தார். இதில் ஒரு சூர்யா வில்லனாகவும் இருந்தார். இந்த படம் தமிழில் சரியாக போகாவிட்டாலும் தெலுங்கு மற்றும் ஓவர்சீஸில் நல்ல லாபம் கொடுத்த படம் என்பதால் விக்ரம் குமார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க சூர்யா ஓகே சொன்னதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்