தமிழ் சினிமாவில் வியாபாரி என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. பிறகு கல்லூரி தோழா பையா சுறா அயன் படிக்காதவன் வேங்கை என பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். பிறகு தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை தமன்னா தெலுங்கு பட ரசிகர்களையும் கவர்ந்தார்.
அதன்பிறகு இந்திக்கு சென்ற நடிகை தமன்னா வெப் சீரிஸ் சிலவற்றில் நடித்தார். இதில் விஜய் வர்மா என்ற இந்தி நடிகருடன் அவருக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் காதலித்தனர். ஆனால் சில ஆண்டுகளில் அவர்களது காதல் பிரேக்கப் ஆகி விட்டது. காதல் தோல்வி என்ற போதிலும் தமன்னா நடிப்பில் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.
இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறிய தமன்னா இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக உள்ளார். சினிமாவில் வெப் சீரிஸில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமில்லாமல் சிறப்பு பாடல் காட்சிகளில் நடனம் ஆடுவதிலும் தமன்னா ஆர்வம் காட்டுகிறார். தமன்னாவின் அயிட்டம் பாடல் நடனங்களுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஆதரவு தொடர்ந்து வருகிறது.
இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக 2023ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவலய்யா பாடலை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். அதனால் நடிகை தமன்னா ஒரு பாடல் காட்சிக்கு நடனமாட ரூ. 1 கோடி ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். சமீபத்தில் கோவாவில் நடந்த ஒரு விழாவில் நடனம் ஆடுவதற்கு நடிகை தமன்னா ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க சம்பளமாக ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை தமன்னா சம்பளம் பெறுகிறார். இப்போது புகழ்பெற்ற மைசூர் சேண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக (பிராண்ட் அம்பாசிடர்) நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோப் நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்கு இதற்கான ஒப்பந்தத்தில் நடிகை தமன்னா கையெழுத்திட்டு கமிட் ஆகியுள்ளார். இதற்காக தமன்னா ரூ. 6.2 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார். சினிமாவில் நடிப்பு டான்ஸ் மூலம் கிடைக்கும் சம்பளத்தை விட விளம்பரத்தில் அதிக வருமானம் தரும் இந்த டீலிங் இப்போது கோலிவுட் மற்றும் விளம்பர சந்தையில் அதிக கவனத்தை பெற்று வருகிறது.





