- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை ஜெனிலியாவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்… அவங்க பையன் கேட்ட அந்த ஒரு கேள்வி… -...

நடிகை ஜெனிலியாவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்… அவங்க பையன் கேட்ட அந்த ஒரு கேள்வி… – சீக்ரெட்டை போட்டுடைத்த மாஜி நாயகி!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதன்பிறகு நடிகர் விஜய் நடித்த சச்சின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் மிக பிரபலமானார். அதன்பிறகு சச்சின் சந்தோஷ் சுப்ரமணியம் வேலாயுதம் உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருந்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நிறைய படங்களில் நாயகியாக நடித்தவர் ஜெனிலியா. ஒரு கட்டத்தில் திருமணம் கணவர் பிள்ளைகள் குடும்பம் என்று செட்டிலான நிலையில் ஜெனிலியா இப்போதும் பாலிவுட்டில் நடக்கும் சினிமா நிகழ்ச்சிகள், திருமண விழாக்களில் கலந்துக் கொள்கிறார்.

- Advertisement -

அப்போது அவரது வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் மீண்டும் ஜெனிலியா போன்ற நடிகைகள் நடிக்க வேண்டும். இன்னும் மங்காத அழகும் நடிப்பு திறமையும் கொண்ட அவரை போன்ற நல்ல நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை தரும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாய்ஸ் படத்தில் நடிகர் சித்தார்த் ஜோடியாக நடித்த ஜெனிலியா பிறகு சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு கொடுத்தது. நடிகர் விஜயுடன் சச்சின் வேலாயுதம் என்ற 2 படங்களில் அவர் நடித்தாலும் வேலாயுதம் படத்தில் ஹன்சிகா மோத்வானி தான் கதாநாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஜெனிலியா கூறியதாவது, நான் குழந்தையாக இருந்ததை விட இப்போது உள்ள குழந்தைகள் நல்ல குழந்தைகளாக இருக்கிறார்கள். அவர்களிடம் எதை பற்றியும் ஒரு தெளிவான பார்வையும் புரிதலும் இருப்பதை தெரிந்துக் கொள்ள முடிகிறது.

நான் அசைவ வகை உணவுகளை எல்லாம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். ஒருமுறை என் மகன், அம்மா நீங்க விலங்குகளை நேசிக்கிறீங்க. அப்புறம் எப்படி சிக்கன் எல்லாம் சாப்பிடுறீங்கன்னு சந்தேகமாக கேட்டான். அன்று முதல் நான் அசைவம் சாப்பிடுவதையே விட்டுட்டேன். இப்போது குடும்பத்தில் எல்லாரும் தாவர உணவுகளை மட்டும்தான் சாப்பிடுகிறோம் என்று நடிகை ஜெனிலியா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்