- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை கண்டபடி டைரக்டர் திட்டிட்டார், நான் பயங்கரமா அழுதுட்டேன், அப்போ அவர் சொன்ன அந்த வார்த்தைகள்…...

என்னை கண்டபடி டைரக்டர் திட்டிட்டார், நான் பயங்கரமா அழுதுட்டேன், அப்போ அவர் சொன்ன அந்த வார்த்தைகள்… – சேது பட நடிகை அபிதா சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுக்கு என தனியான ஒரு கவனமும் பார்வையும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அப்படிப்பட்ட இயக்குனர்களின் படங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு படமும் சில ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி பேசும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் நின்று விடுகிறது.

அந்த வகையில் 30 ஆணடுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை இதுவரை 15 தான். அதே போல் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர் பாலாவின் படங்கள் இன்னும் 10 என்ற எண்ணிக்கையை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சேது படம்தான் பாலா இயக்கிய முதல் படம். தொடர்ந்து நந்தா நான் கடவுள் பிதாமகன் அவன் இவன் பரதேசி தாரை தப்பட்டை வணங்கான் என 8 படங்களை மட்டுமே அவர் டைரக்ட் செய்திருக்கிறார். இப்போது அடுத்த படம் குறித்த டிஸ்கஷனில் அவர் திருவண்ணாமலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்டோரி டிஸ்கஷனில் இயக்குனர் மாரி செல்வராஜூம் இருப்பதாக தெரிகிறது.

இதில் பாலா இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியான சேது படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அபிதா. பிறகு பல படங்களில் சில சீரியல்களிலும் அவர் நடித்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை அபிதா கூறியதாவது, இயக்குனர் பாலா என்று சொன்னாலே எனக்கு சேது படம் ஆடிசன் ஷூட்டிங் தான் ஞாபகத்துல வருது.

- Advertisement -

நான் அப்போ சின்ன சின்ன கேரக்டர் பண்ணிட்டு இருந்தேன். அப்போ பாலா சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி வரச்சொன்னாங்க. நல்லா டிரஸ் பண்ணிட்டு மேக்கப் போட்டுட்டு அங்கே போனேன். போன உடனே கையில ஒரு சோப்பை கொடுத்து மூஞ்சிய நல்லா கழுவிட்டு வாங்கன்னு டைரக்டர் சொன்னார். என்னோட படத்துக்கு மேக்கப் வேணாம். நீங்க சாதாரணமா எப்படி இருப்பீங்களோ அப்படி இருந்தால் போதும் என்று சொல்லிட்டார்.

என்னோட அறிமுகப் பாடலில் எனக்கு டான்ஸ் சரியா ஆட வரல்லே. என்னை எல்லாருடைய முன்னாடியும் டைரக்டர் திட்டிட்டார். நான் அப்போ பயங்கரமா அழுதுட்டேன். அப்போது அவர், உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். ஏன்னா நீயும் பெரிய ஆளா வரணும். உனக்கும் இது முதல் படம். எனக்கும் இது முதல் படம் அப்படீன்னு என்கிட்ட சொன்னார் என்று நடிகை அபிதா கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்