நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட இந்த படம் சென்சார் பிரச்னையில் சிக்கி ரீவைசிங் கமிட்டி பார்வைக்கு சென்றுள்ளது. இன்னும் ரீவைசிங் கமிட்டி படத்தை பார்க்கவில்லை. அதனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளி போய்விட்டது.
எப்படியும் இந்த மாத இறுதிக்குள் வந்துவிடும் என்று ஜனநாயகன் படம் குறித்து தகவல் வெளியான நிலையில் அதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை என்றும் அப்டேட் வெளியாகி உள்ளது. வருகிற ஜூன் மாதம்தான் இந்த படம் ரிலீஸாகும். அதுவரை ஜனநாயகன் படம் வராது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அரசியல் களத்தில் தவெக தலைவராக உள்ள நடிகர் விஜய் இந்த படத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சில அரசியல் காட்சிகளை வைத்திருக்கிறார். ஆனால் தேர்தலுக்கு இந்த படம் வந்தால் அந்த காட்சிகளுக்கு ரசிகர்களிடம் பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைக்காமல் போகலாம். மேலும் இந்த படத்தின் கணிசமான வசூலையும் அது பாதிக்கலாம்.
இதற்கிடையே நடிகர் விஜய் நடித்த படங்களில் இயக்குனர் அட்லி இயக்கிய தெறி மெர்சல் பிகில் ஆகிய 3 படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. அதிலும் தெறி படத்தில் போலீஸ் அதிகாரி விஜய்குமார் கேரக்டரில் விஜய் நடிப்பு வேற லெவலில் அதிரடியாக இருந்தது. தெறி படத்தில் இரட்டை நாயகிகளாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர். நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் நடித்திருந்தார்.
இந்த சூழலில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளிவராத நிலையில் ஜூன் மாதம் வரை தள்ளிப் போய்விட்டது. அதனால் தெறி படம் கடந்த ஜனவரி 15ம் தேதி ரி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. அப்போது புதிய படங்கள் ரிலீஸ் காரணமாக பிறகு ஜனவரி 23ம் தேதிக்கு தெறி ரி ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. பிறகு அந்த நாளிலும் ரி ரிலீஸ் செய்யப்படவில்லை.
அதன்பிறகு தெறி படம் ரி ரிலீஸ் செய்யப்படும் தேதி பற்றி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். ஜனநாயகன் வராத நிலையில் தெறி படமும் வரலையே என புலம்பினர். இப்போது வருகிற 27ம் தேதி தெறி படம் ரி ரிலீஸ் செய்யப்படும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணு அதிகாரபூர்வமாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.





