- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயம் ரவிக்கு மும்பைதான் ராசியா? வெற்றிப் பட இயக்குனர்களின் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆவதால் ரசிகர்கள்...

ஜெயம் ரவிக்கு மும்பைதான் ராசியா? வெற்றிப் பட இயக்குனர்களின் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆவதால் ரசிகர்கள் ஆச்சரியம் – போட்றா வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. ஆரம்பத்தில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தனி ஒருவன், போகன், வனமகன் போன்ற வெற்றிப் படங்களை தந்த ஜெயம் ரவிக்கு, சமீபகாலமாக பெரிய அளவில் வெற்றிப் படங்கள் அமையவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகிலன், இறைவன், சைரன் 108 படங்களும் ஏமாற்றத்தை தந்தன.

இப்போது அவரது நடிப்பில் வருகிற 31ம் தேதி, தீபாவளிக்கு அமரன் படம் ரிலீஸாகிறது. சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், நாயகியாக நடித்திருக்கிறார். அக்கா, தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிரதர் படத்தில் அக்காவாக பூமிகா, தம்பியாக ஜெயம் ரவி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன்பிறகு, தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான காதலிக்க நேரமில்லை என்ற படத்தில், ஜெயம் ரவி நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, சமீபத்தில் சிறந்த நடிகை தேசிய விருது பெற்ற நித்யாமேனன் நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த படமும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

இதற்கிடையே திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை ஆர்த்தியை பிரிந்துள்ள நடிகர் ஜெயம் ரவி, விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். மேலும், சென்னையில் இருந்து மும்பையில் செட்டிலாகி விட்ட ஜெயம் ரவி, இனி மும்பையில் இருந்துதான் சென்னைக்கு வந்து படப்பிடிப்புகளில் பங்கேற்க உள்ளார்.

- Advertisement -

மும்பையில் ஜெயம் ரவி செட்டிலான நிலையில் இப்போது அடுத்தடுத்து 3 படங்களில் அவர் கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அவர் நடிப்பில் எந்த படமும் வெற்றி பெறாத நிலையில், வருகிற 31ம் தேதி தான் பிரதர் படம் வெளிவர உள்ளது. அதற்குள் அவர் 3 முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்.

டிமாண்டி காலனி 2, ரெட்டத்தல படங்களை தயாரித்த பிடிஜி யுனிவர்சல் தயாரிக்கும் 2 படங்களில் ஜெயம் ரவி நடிக்கிறார். இதில் ஒரு படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். மற்றொரு படத்தை இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிசெய்த அருள் சக்தி முருகன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். மற்றொரு படத்தை இயக்கவும் ஒரு முக்கிய இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படி மும்பையில் செட்டிலான உடன் ஜெயம் ரவி 3 படங்களில் லைன் அப்களில் இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்