- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அடிக்கடி விமர்சனத்தில் சிக்குவது ஏன்? அவரிடம் அது இல்லை என போட்டுத் தாக்கிய...

நடிகர் விஜய் அடிக்கடி விமர்சனத்தில் சிக்குவது ஏன்? அவரிடம் அது இல்லை என போட்டுத் தாக்கிய பிரபல நடிகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். சில படங்களில் வில்லன் அடியாட்களில் ஒருவராக அவர் நடித்திருக்கிறார். முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்த பயில்வான் ரங்கநாதன் ஒரு மூத்த சினிமா பத்திரிகையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் குறித்து அவ்வப்போது நேர்காணல்களில் பங்கேற்று பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசி வருகிறார். இதில் சில நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட குணங்கள் குறைகள் குறித்தும் அவர்கள் செய்த தவறுகள் குறித்தும் விமர்சிப்பது அவரது வழக்கமாக உள்ளது.

- Advertisement -

குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் குறித்தும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக நடிகை திரிஷாவுக்கும் நடிகர் விஜய்க்கும் உள்ள நட்பு குறித்தும் அவர் பலமுறை பேசிய நிலையில் இப்போதும் ஒரு முக்கியமான விஷயத்தை அவர் முன்வைத்து பேசியிருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, மனைவி விஜயுடன் இல்லை. அவரது மகன் விஜயுடன் இல்லை. அவரது மகள் விஜயுடன் இல்லை. விஜய் தனியாக ஒரு பங்களாவில் இருந்து வருகிறார். மனைவி மகன் மகள் இருந்தும் நடிகர் விஜய் தனியாக வாழ்கிறாரே ஏன்?

- Advertisement -

நடிகை திரிஷாவுடன் 2 முறை தனி விமானத்தில் கோவா சென்று வந்தாரே அது ஏன்? அவர் நடிகராக இருந்தால் நமக்கு பிரச்னையே இல்லை. அவர் நடிகர் அவர் நடிகை இருவரும் ஒன்றாக போகலாம் தப்பே இல்லை. டிஸ்கஷனுக்கு கூட போகலாம். ஆனால் அவர் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவர்.

எங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்க வேண்டியவர். நாங்கள் எல்லாம் எங்களுக்கு வழிகாட்டியாக இருப்பவரிடம் ஒழுக்கம் எதிர்பார்க்கிறோம். ஒழுக்கம் நிறைந்தவராக விஜய் இருக்க வேண்டும். ஆனால் அந்த ஒழுக்கம் என்பது விஜய் கிட்ட இல்லையே? அதனால் தான் அவர் விமர்சனத்துக்கு உள்ளாகிறார் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்