- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 பட விழாவில் சூரியை தாறுமாறாக விமர்சித்த நடிகர் விஜய் சேதுபதி, நீங்க இப்படி...

விடுதலை 2 பட விழாவில் சூரியை தாறுமாறாக விமர்சித்த நடிகர் விஜய் சேதுபதி, நீங்க இப்படி பேசலாமா பாஸ்? ஒரு வேளை பிக்பாஸ் நிகழ்ச்சின்னு நெனைச்சிட்டாரோ…

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை 2 படம் வருகிற டிசம்பர் 20ம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகை பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் நடிகர் சூரியை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி பேசினார். அவர் பேசும்போது, சூரி குறித்து சில கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் ஜாலியாக பேசுவது போல் காட்டிக்கொண்டாலும் அவரது முகத்தில் கடுமையும் எரிச்சலும் அப்பட்டமாக வெளிப்பட்டது. இதைப் பார்த்து மேடையில் இருந்தவர்கள் மட்டுமின்றி, பார்வையாளர்களாக அமர்ந்திருந்த ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

- Advertisement -

விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, போன ஆடியோ லான்ஞ்சிலேயும் சூரி இதே வேலையை தான் பார்த்தான்.அவனே எல்லாத்தையும் பேசி முடிச்சிடுவான். எங்க ரெண்டு பேருக்கு தெரிஞ்ச சம்பவம் ஒண்ணா தான் இருக்கும். அவன் அதை எல்லாத்தையும் சொல்லி முடிச்சுடுவான். அப்புறம் நான் பேச வந்தால் என்ன சொல்றதுன்னு தெரியாது.

நானும் ஏதாவது விட்டு வைப்பான், நாம அதைப்பத்தி பேசலாம் என்று பார்த்துக்கொண்டு இருந்தால், இளையராஜாவை அவரது வீட்டில் சந்திச்சது வரைக்கும் எல்லாத்தையும் அவனே சொல்லிட்டான். இப்போ நான் என்ன சொல்றதுன்னே தெரியலை. அதனால் என்ன, இப்போ நான் சூரியைவே புகழ்ந்திடுறேன்.

- Advertisement -

இவ்வளவு பெரிய ஒரு ஹீரோ, அவரோட படத்துல எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சொல்லணும். ஏன்னா எனக்கு மேடையிலேயே பேச வாய்ப்பு கொடுக்காத ஒருத்தன், படத்துல வாய்ப்பு கொடுத்திருக்கான்னா யோசிச்சு பாருங்க. நமக்கு அப்புறம் ஒருத்தன் பேசணுமோ, அந்த நாகரிகம் கருதி, ஏதாச்சும் கொஞ்சம் விட்டு வெச்சுட்டு போவேமுன்னு அதெல்லாம் கிடையாது.

வீட்டுல மூத்த பிள்ளைன்னு இருந்தா, கடைசி பையனுக்கு கொஞ்சம் சாப்பிட வெச்சுட்டு போகணும். இப்படி மொத்தமா வழுச்சி நக்கீட்டு போனா நான் என்னத்தடா பேசறது, என்று சூரியை பார்த்து விஜய் சேதுபதி தாறுமாறாக பேசிவிட்டார். நிச்சயமாக அவர் பேசியதில் யதார்த்தம் இல்லை. காழ்ப்புணர்ச்சியும், கோபமும் அப்பட்டமாக வெளிப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனதால் மக்கள் செல்வன் இப்படி மாறிட்டாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்