- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் நடித்த 100 படங்களில் அப்படி ஒரு அதிசயம் நடந்ததா? - நடிகர் அஜய் ரத்னம்...

விஜயகாந்த் நடித்த 100 படங்களில் அப்படி ஒரு அதிசயம் நடந்ததா? – நடிகர் அஜய் ரத்னம் சொன்ன தகவலை கேட்டு வாய் பிளந்த கேப்டன் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த். எப்போதுமே அவரது அலுவலகம் அல்லது வீடு தேடி வருபவர்களை உணவு சாப்பிடாமல் பசியோடு அவர்களை கேப்டன் திருப்பி அனுப்பியது இல்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு, யாரை பார்த்தாலும் சாப்பிட்டீங்களா என்று கேட்கும் ஒரு சிறந்த குணம் கேப்டனிடம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தயாரிப்பாளர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என்பதையும் தாண்டி பல விஷயங்களில் விஜயகாந்த் நேர்மையானவராக இருந்தார். குறிப்பாக அவரது துணிச்சல் என்பது அசாத்தியமானது. நடிகர் சங்க கடனை அடைக்க ரஜினி கமல் போன்ற ஜாம்பவான் ஹீரோக்களை எல்லாம் வெளிநாடு அழைத்துச் சென்று நட்சத்திர கலை இரவு நடத்திய ஒரே தைரியசாலி கேப்டன் தான். அத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் ஒரே விதமான உணவு என்பதில் கேப்டன் உறுதியாக இருந்தார். இதுதான் எம்ஜிஆரின் பாலிசி.

- Advertisement -

அதனால் தான் அவர் தேமுதிக அரசியல் இயக்கத்தை விஜயகாந்த் ஆரம்பித்து மக்களை சந்தித்த போது அவரை கருப்பு எம்ஜிஆர் என்று மக்கள் அன்போடு அழைத்தனர். பெருவாரியான ஓட்டுகளை தந்து சட்டசபை தேர்தல்களில் அவருக்கு அமோக ஆதரவும் தந்தனர். தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக கேப்னை அமர வைத்து அழகு பார்த்தனர் என்றால் அது மிகையல்ல.

கேப்டன் மறைந்து 3 ஆண்டுகள் ஆனாலும் அவரது புகழ் இன்னும் குறையவில்லை. தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் அஜய் ரத்னம். கேப்டனுடன் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரி டாக்டர் போன்ற கேரக்டர்களிலும் அஜய் ரத்னம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அஜய் ரத்னம் கூறியதாவது, விஜயகாந்த் சார் 100 படம் பண்ணியிருக்கார். அந்த 100 படத்துக்கும் ஒரே கேமராமேன் ராஜராஜன் தான். ஒரே மேக்கப் மேன் தான். அதே மேனேஜர் தான். அதே காஸ்டியூமர் தான். ஒரே குடும்பம் தான். அந்த மாதிரி தான் மக்களை அவர் லவ் பண்ணினார்.

விஜயகாந்த் சார் எப்படி என்றால் எம்ஜிஆர் சாருக்கு அப்புறம் அவரோட படத்துல எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான். கறி மீன் கோழி இல்லாம சாப்பாடு கிடையாது. சூட்டிங் ஸ்பாட்டில் கிண்டல் பண்ணீட்டு எல்லார்கூடயும் விளையாடீட்டு இருப்பார். அதனால்தான் அவருக்கு பெயர் கேப்டன். அது சும்மா ஒண்ணும் வராது. ஏதாவது பண்ணினால் தான் வரும் என்று அஜய் ரத்னம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்