தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களால் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் கலாபக காதலன் வட்டம் உள்ளம் கேட்குமே வேட்டை அவன் இவன் நான் கடவுள் ராஜா ராணி சார்பட்டா பரம்பரை பாஸ் என்கிற பாஸ்கரன் என பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர்.
இப்போது நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை 2ம் பாகத்தில் நடிகர் ஆர்யா நடிக்க கமிட் ஆகியுள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் என்ற படத்தில் நடிகர் ஆர்யா வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக அட்டக்கத்தி தினேஷ் நடிக்கிறார்.
நடிகர் ஆர்யா சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிவி ஷோவில் பங்கேற்றார். எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டைட்டில் கொண்ட டிவி ஷோவில் கலந்துக்கொண்டு பிரபலமானவர் அபர்ணதி. அந்த நிகழ்ச்சியின் முடிவில் அபர்ணதியை திருமணம் செய்துக்கொள்ள நடிகர் ஆர்யா மறுத்துவிட்டார்.
அந்த நிகழ்ச்சி ஒரு ஸ்கிரிப்ட் அடிப்படையில் உருவானது என்றும் அதற்காக போட்டியாளர்களில் வென்ற அபர்ணதியை ஆர்யா திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அதபிறகு நடிகர் ஆர்யா பிறகு சாயிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். வனமகன் கடைக்குட்டி சிங்கம் காப்பான் போன்ற படங்களில் சாயிஷா நாயகியாக நடித்திருந்தார்.
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அபர்ணதி பிறகு ஜெயில் தேன் இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது வெஞ்சன்ஸ் என்ற படத்தில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படமே கதாநாயகியை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெஞ்சன்ஸ் படம் குறித்து நடிகை அபர்ணதி கூறியதாவது, நான் கலெக்டராக இந்த படத்தில் நடித்துள்ளேன். இந்த கதை அரசியல் சார்ந்த விஷயங்களை மிகவும் ஆழமாக பேசுகிறது. எனக்கு ஆக்சன் காட்சிகளும் இருக்கின்றன. எனக்கு நடிகர் ஆர்யாவுடன் நடிப்பதில் விருப்பம் இல்லை. அவருடன் அந்த டிவி ஷோவில் நிறைய வாரங்கள் ஒன்றாக நடித்தது பசுமையாக இருக்கிறது. அதை ஒரு ஹீரோயினாக வேறு படத்தில் நடித்து அந்த நினைவுகளை அழிக்க விரும்பவில்லை. மற்றபடி ஆர்யாவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று அபர்ணதி கூறியிருக்கிறார்.






