தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரகுமான். மணிரத்னம் இயக்கிய ரோஜா படம்தான் அவரது முதல் படம். முதல் படத்திலேயே அவரது இசையை ரசிகர்கள் கொண்டாடினர். சின்ன சின்ன ஆசை என்ற அவரது பாடலுக்கு அப்போது தேசிய விருது கிடைத்தது.
அதன்பிறகு பலமுறை தேசிய விருதுகளை ஏஆர் ரகுமான் பெற்று விட்டார். அத்துடன் ஏஆர் ரகுமான் 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். இசைப்புயல் என கொண்டாடப்படும் அவரை ஒரு காலகட்டத்தில் சினிமா ரசிகர்கள் வெகுவாக விரும்பினர். இதில் சில பெண் ரசிகைகள் அவரை மனதார காதலிக்கவே செய்தனர்.
அந்த வரிசையில் சினிமாவில் இருந்த சில நடிகைகளும் ஏஆர் ரகுமானை மனசுக்குள் காதலித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் கமல்ஹாசன் அஜீத்குமார் அரவிந்த்சாமி விஜய் என பல நடிகர்கள் மீது பெண்களுக்கு இயல்பாகவே ஒரு ஈர்ப்பு ஏற்படுவது சாதாரணமாக ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஏஆர் ரகுமானை ஒரு நடிகை மிகவும் தீவிரமாக காதலித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
கடந்த 1990களில் பல படங்களில் நடித்தவர் நடிகை மோகினி. அந்த காலகட்டத்தில் வெளியான பல படங்களில் அவர் நாயகியாக நடித்திருந்தார். ஈரமான ரோஜாவே நாடோடி பாட்டுக்காரன் கண்மணி நான் பேச நினைப்பதெல்லாம் புதிய மன்னர்கள் பட்டுக்கோட்டை பெரியப்பா வனஜா கிரிஜா போன்ற பல படங்களில் நாயகியாக நடித்தவர் மோகினி.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னட மொழி படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை மோகினி கூறியதாவது, நான் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் தீவிரமான ரசிகை. அவர் மீது வெறித்தனமான அன்பு என்றும் சொல்லலாம். அவர் இஸ்லாமுக்கு மாறியது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இந்துவாக இருந்தேன்.
அவர் மதம் மாறாமல் இருந்திருந்தால் வீட்டில் எனக்கு அவரை பிடித்திருக்கிறது, திருமணம் செய்து வையுங்கள் என்று சொல்வதற்கு வசதியாக இருந்திருக்கும் என்று அதில் நடிகை மோகினி வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஏஆர் ரகுமான் இஸ்லாம் மதத்துக்கு மாறியதால் இந்து பெண்ணாக இருந்த தன்னால் அவரை திருமணம் செய்துகொள்ள முடியாமல் போய்விட்டது என்று இப்போது தனது மனக்குறையை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.





