- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமாரை வைத்து படம் தயாரிப்பேன்… அது ரசிகர்களின் திருவிழாவாக இருக்கும் - மதுரையில் பிரபல...

நடிகர் அஜீத்குமாரை வைத்து படம் தயாரிப்பேன்… அது ரசிகர்களின் திருவிழாவாக இருக்கும் – மதுரையில் பிரபல நடிகர் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான தாய்கிழவி படம் வெளியானது. மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் தாய்க்கிழவி படம் பார்த்தார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இது ஒரு ஜனரஞ்சகமான படம். எல்லா வயதினரும் பார்க்க வேண்டிய படம்.

இந்த படத்தின் இயக்குனர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் படத்தின் முதல் காட்சியை மதுரையில் பார்க்க வந்தோம். இந்த படத்தில் சின்ன சின்ன இடங்களில் கூட பார்த்து ரசித்து சிரிக்கிறார்கள். நல்ல உணர்வுபூர்வமான படமாக உள்ளது. தாய்க்கிழவி என்பது ஆதி பெண் தெய்வத்தை குறிக்கும். ஒரு பெண் வீட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்பதும் பெண்ணை ஒரு தெய்வத்துக்கு சமமாக நினைக்கிறார்கள் என்பதும் தான் இந்த படம் காட்டுகிறது.

- Advertisement -

பெரிய படிப்பு படிக்காமல் குடும்ப நிர்வாகத்தை நிலை நிறுத்தக்கூடிய பெண்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். அதை சொல்கிற படம் தான் தாய்க்கிழவி. நல்ல படங்களில் நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் படங்களை தயாரித்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் சொல்ல முடியாத சில முயற்சிகளை என் தயாரிப்பின் மூலம் செய்கிறேன்.

அடுத்து சேயோன் படமும் மதுரை மண் சார்ந்த படமாக தான் இருக்கும். சினிமாவில் அரசியல் கருத்துக்களை புகுத்துவது எல்லா காலகட்டத்திலும் இருக்கிறது. அது தப்பு கிடையாது. சமூகத்தின் பிரதிபலிப்பு தான் சினிமா. தமிழ் சினிமாவில் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தைரியமாக சொல்வதற்கான சூழல் இருப்பது சந்தோஷமான விஷயம்.

- Advertisement -

சினிமாவில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களை பற்றி நான் எல்லா இடத்திலும் சொல்வேன். இந்த படத்தை நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் சூர்யா ஜோதிகா என எல்லாரும் பலரும் பாராட்டினர். எனக்கு ஆதரவாக இருப்பவர்களை எந்த நேரத்தில் நான் விட்டுக் கொடுத்ததே இல்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படத்துக்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். அது போன்ற படத்தை நான் தயாரிக்கிறேன். ஆனால் அதற்கேற்ப கதை எழுத வேண்டும் என்றார்.

அஜீத்குமார் படத்தை தயாரிப்பீர்களா என்ற கேள்வி பதிலளித்த அவர், நானே குட்டியாக ஒரு கம்பெனி வைத்து படம் தயாரித்து வருகிறேன். அவ்வளவு பெரிய கம்பெனியாக எங்கள் நிறுவனம் இன்னும் வளரவில்லை. வளர்ந்து அஜீத் சாரிடம் கேட்டு அவர் ஓகே சொன்னால் அவரை வைத்து படம் பண்ணுவோம். ஆனால் அப்படி ஒன்று நடந்தால் நிச்சயம் அது அஜீத் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடும் வகையில் தான் அந்த படம் இருக்கும். இப்போதைக்கு எனக்கு கிடைக்கும் சம்பளத்திலிருந்து கொஞ்சம் எடுத்து நல்ல படங்கள் தயாரிப்பதே நோக்கம் என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

- Advertisement -

சற்று முன்