தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனா. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தில் வடிவேலு மனைவியாக நடித்து நடிகை சோனா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார். குரு என் ஆளு அழகர் மலை ஒன்பதுல குரு ஜித்தன் 2 கோ பத்துக்கு பத்து மிருகம் போன்ற படங்களில் சோனா நடித்திருக்கிறார்.
பெரும்பாலும் நடிகை சோனா கவர்ச்சி கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு விவேக் போன்றவர்களுக்கு ஜோடியாகவும் அவர் சில படங்களில் நடித்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை சோனா பேசியிருக்கிறார்.
போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். பிறகு நானும் ரவுடிதான் தானா சேர்ந்த கூட்டம் காத்துவாக்குல ரெண்டு காதல் சமீபத்தில் வெளியான எல்ஐகே உள்ளிட்ட படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது நடிகை நயன்தாராவுக்கும் விக்கிக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துணிவு படத்தில் நடித்த பிறகு நடிகர் அஜீத்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை நிராகரித்துவிட்டு இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜீத்குமார் நடித்தார். இது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் பலத்த ஏமாற்றத்தை தந்தது. அப்போது ரசிகர்கள் மத்தியில் இது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கவர்ச்சி நடிகை சோனா கூறியதாவது, விக்னேஷ் சிவன் என் ஆபீஸ்ல தான் மூணு வருஷம் வேலை செஞ்சார். எனக்கு நிறைய உதவிகள் செஞ்சார். அவரை பற்றிய சில விஷயங்கள் சொல்லிடுவேன். ஆனால் நயன்தாரா மேல் ரொம்பவும் எனக்கு மரியாதை இருக்கு.
அவங்களும் என்னை மாதிரி நிறைய கஷ்டப்பட்டு இன்னைக்கு ஒரு குடும்பமா இருக்காங்க. அதுக்காக விக்னேஷ் சிவன் கெட்ட ஆள் எல்லாம் கிடையாது. ஆனால் என்ன? என்னை மறந்துட்டாரேன்னு தான் வருத்தமா இருக்கு. என்ன பண்றது? அப்படி அவருக்கு வாழ்க்கை மாறிடுச்சு. அவ்வளவுதான் என்று நடிகை சோனா அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





