- Advertisement -
Homeபொழுதுபோக்குமுழுக்க முழுக்க அந்த ஊரில்தான் ஷூட்டிங்… அந்த படம் சென்டிமென்ட் தான் காரணமா? நடிகர் சிவகார்த்திகேயன்...

முழுக்க முழுக்க அந்த ஊரில்தான் ஷூட்டிங்… அந்த படம் சென்டிமென்ட் தான் காரணமா? நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் – லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பராசக்தி. இது அவரது 25வது படமாகவும் இருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் ரவிமோகனுக்கு கிடைத்த பாராட்டு சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கவில்லை. படமும் காட்டு மொக்கை என்ற விமர்சனம் கிடைத்தது.

பராசக்தி படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரடக்சன்ஸ் சார்பில் தாய்கிழவி என்ற படத்தை தயாரித்துள்ளார். ராதிகா சரத்குமார் பவுனுத்தாயி கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளிலேயே 2.5 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி அல்லது வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அது எதுவும் நடக்கவில்லை. சிபி சக்ரவர்த்தி ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தை இயக்க கமிட் ஆகிவிட்டார்.

வெங்கட்பிரபு இயக்கும் படமும் தாமதமான நிலையில் தாய்கிழவி படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட் ஆகி விட்டார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரிய அளவில் கவனம் பெற்ற நிலையில் இது முழுக்க கிராமத்து கதையாக உருவாகிறது.

- Advertisement -

சேயோன் படம் மதுரை கதைக்களத்தில் முழுக்க முழுக்க உருவாகிறது. மதுரை உசிலம்பட்டிதான் இந்த படம் லொகேஷன் ஸ்பாட்டாக உள்ளது. மொத்தம் 80 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள படப்பிடிப்பில் 65 நாட்கள் சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

சிவக்குமார் முருகேசன் இயக்கிய முதல் படம் தாய்கிழவி. அந்த படம் முழுக்க முழுக்க உசிலம்பட்டியில்தான் உருவானது. அதனால் சேயோன் படமும் சென்டிமென்ட் ஆக அதே ஊரில் அதே லைவ் லொக்கேஷனில் எடுக்கப்படுவதாக தெரிகிறது. தாய்கிழவி படத்துக்கு கிடைத்த ஆதரவும் அமோகமும் சேயோன் படத்துக்கும் கிடைக்கும் என்ற சென்டிமென்ட் தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்