- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாட்டுக்கே பிடிச்ச தளபதியை பெத்த மகனுக்கு பிடிக்கலையா? - ஜேசன் சஞ்சய் செயலால் அப்செட் ஆன...

தமிழ்நாட்டுக்கே பிடிச்ச தளபதியை பெத்த மகனுக்கு பிடிக்கலையா? – ஜேசன் சஞ்சய் செயலால் அப்செட் ஆன தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளார். அவரது கடைசி படம் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாத நிலையில் தளபதி ரசிகர்கள் உச்சக்கட்ட விரக்தியில் இருந்து வருகின்றனர். எப்படியும் அந்த படம் சட்டசபை தேர்தலுக்கு பிறகுதான் வெளியாகும் என்பதும் உறுதியாகி விட்டது. ஜூன் 25ம் தேதி ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் முன்னிலையில் உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பாக செயல்பட்டு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருப்பது தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமைதியாக இருந்த சங்கீதா இப்போது விஜய்க்கு எதிராக ஏவிய அம்பு அரசியல் சூழ்ச்சி என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மனுவில், ஒரு நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் விஜயை பிரிந்து ஒரே வீட்டில் தனித்து வாழ்வதாகவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார். மேலும் தேவைப்பட்டால் அந்த நடிகை பெயரை வெளியிட்டு இந்த வழக்கில் 2வது மனுதாரராக சேர்ப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

வரும் ஏப்ரல் 20ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் விஜய் ஆஜராக வேண்டும் என்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா விஜயை அன் பாலோ செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஏற்கனவே திரைப்பட இயக்குனராக உருவாகி லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் சிம்கா என்ற படத்தை இயக்கி உள்ளார். சென்னையில் நீலாங்கரையில் விஜய்க்கு கடல் போல் வீடு இருந்தும் மகன் ஜேசன் சஞ்சய் அண்ணா நகரில் ஒரு அபார்ட்மென்டில் தனியாக ரூம் எடுத்து தங்கியுள்ளார். இப்போது அவர் செய்துள்ள இந்த விஷயம், பெற்ற மகனுக்கே தமிழகமே கொண்டாடும் அப்பா விஜயை பிடிக்கவில்லையா என தளபதி ரசிகர்கள் பலத்த அப்செட்டில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்