கேரளாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் அனஸ்வரா ராஜன். ராங்கி வாங்கு எவிடே தண்ணீர் மத்தன் தினங்கள் மைசாண்டா அவியல் சூப்பர் சரண்யா உள்ளிட்ட மலையாள மொழி படங்களில் நடித்திருக்கிறார். இப்போது மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் அனஸ்வரா ராஜன் வந்திருக்கிறார்.
டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நடித்த வித் லவ் படத்தில் அறிமுகமான அனஸ்வரா ராஜனுக்கு ரசிகர்கள் மத்தியில் நிறைய வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த படமும் நல்ல வெற்றியை பெற்றுள்ளதால் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் செல்வராகவன். இப்போது நடிகராகவும் மாறி விட்டார். செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா சோனியா அகர்வால் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற படம் 7ஜி ரெயின் போ காலனி. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் நடிகை அனஸ்வரா ராஜன் கமிட் ஆகி நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் கொடுத்த கால்ஷீட் கொடுத்த நாட்களில் செல்வராகவன் படப்பிடிப்பு நடத்தாமல் அப்படியே விட்டுவிட்டார். இந்த படத்துக்காக 45 நாட்கள் வரை அவர் கால்ஷீட் அனஸ்வரா தந்திருக்கிறார். ஆனால் அந்த நாட்களில் எல்லாம் ஷூட்டிங்கே நடக்கவில்லை.
அந்த நேரத்தில் படத்தின் ஹீரோ ரவி கிருஷ்ணாவுக்கு உடல் நலம் இல்லாததாலும் அதன்பிறகு இயக்குனர் செல்வராகவனுக்கும் உடல் நலம் பாதிக்கப்படட்டதாலும் சரியான திட்டமிட்பபடி 7ஜி ரெயின் போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்த நாட்களில் ஷூட்டிங் நடக்காததால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இன்னும் பாக்கியுள்ளன.
இப்போது அனஸ்வரா ராஜன் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், வரும் மார்ச் 15ம் தேதி வரை தான் உங்களுக்கு டைம் தர முடியும். அதற்கு மேல் டைம் தர முடியாது. 2 வாரங்களுக்குள் என் காட்சிகளை எல்லாம் எடுத்து விடுங்கள். நான் ஏற்கனவே கமிட் ஆன மலையாள படத்தில் நடிக்க கேரளாவுக்கு போக வேண்டும் என்று கண்டிஷனாக இயக்குனர் செல்வராகவனிடம் அனஸ்வரா ராஜன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.





