சென்னை 28 படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் வெங்கட்பிரபு. முதல் படமே பெரிய வெற்றியை தந்த நிலையில் சரோஜா கோவா மங்காத்தா மாசு என்கிற மாசிலாமணி சென்னை 28 இரண்டாம் பாகம் போன்ற படங்களை இயக்கினார். மங்காத்தா படம் பெரிய வரவேற்பை கொடுத்தது.
அடுத்து நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கினார். கடந்த 2024ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் படத்துக்கு கிடைத்தாலும் அந்த ஆண்டில் 445 கோடி ரூபாய் வசூலித்து தமிழ் படங்களில் முதலிடமும் பிடித்தது.
தி கோட் படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயன்ஸ்பிக்சன் கதையை வெங்கட்பிரபு இயக்குவது என்றும் அதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிப்பதாகவும் ஏற்கனவே முடிவாகி இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் அந்த படத்துக்காக கால்ஷீட் தராமல் 2 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டார்.
இயக்குனர் வெங்கட்பிரபுவை வெயிட்டிங் லிஸ்ட்டில் 2 ஆண்டுகளாக காத்திருக்க வைத்து விட்டார். அயலான் மதராஸி பராசக்தி படங்களுக்கு பிறகு இப்போது தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்க கமிட் ஆன சிவகார்த்திகேயன், அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தில் நடிக்க உள்ளார்.
அதனால் வெங்கட்பிரபு படம் இனி உருவாக வாய்ப்பில்லை என்பதால் வெங்கட்பிரபு பயங்கர அப்செட்டில் உள்ளார். ஆனால் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இந்த படத்தை எடுக்க நாங்கள் தயார். பட்ஜெட் மட்டும்தான் குறைக்க சொல்கிறோம். சிவகார்த்திகேயனுக்கு கதை ஓகே என்றால் நாங்கள் படத்தை எடுக்க தயார் என்று வெங்கட்பிரபுவிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் கதையில் முழு திருப்தி இல்லை என்கிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவை சமீபத்தில் நேரில் சந்தித்த இயக்குனர் வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆன இந்த சயின்ஸ்பிக்சன் கதையில் நீங்கள் நடிங்க. மாநாடு 2 என டைட்டில் வைத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். மாநாடு படத்தின் கதைக்களம் வேறு. இது சயின்பிக்சன் படம் இரண்டுக்கும் தொடர்பே இல்லையே என்று சிம்பு மறுத்திருக்கிறார். அதனால் வெங்கட்பிரபுவின் சயின்ஸ் பிக்சன் கதையை படமாவது எஸ்கே கையில்தான் உள்ளது.





