- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா நடித்த 46வது படம்… டைட்டில் போஸ்டர் வெளியீடு - நாதன் நாத்...

நடிகர் சூர்யா நடித்த 46வது படம்… டைட்டில் போஸ்டர் வெளியீடு – நாதன் நாத் ஆக மாறியது இதற்காக தானா?

- Advertisement -

இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் கருப்பு. இது சூர்யாவின் 45வது படமாக உருவானது. அதற்கு பிறகு வாத்தி லக்கி பாஸ்கர் படங்களை தந்த தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது அடுத்த படத்தில் நடித்தார். இந்த படம் சூர்யா 46 என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இதில் மலையாள இளம் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படம் வித்யாசமான ஒரு கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி படம் போல ஒரு மாறுபட்ட கேரக்டரில் சூர்யா இதில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது

நடிகர் சூர்யாவுக்கு கடந்த 12 ஆண்டுகளாக பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் இல்லை. அவர் பெரிய அளவில் எதிர்பார்த்த பல படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவிய நிலையில் கங்குவா படமும் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி வெளியான ரெட்ரோ படம் கூட அதிகளவில் ரசிகர்களிடம் கவனம் பெறவில்லை.

இதற்கிடையே சூர்யா 46 படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்தின் டைட்டில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற ஜூலை மாதம் ரிலீஸ் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜி இயக்கிய கருப்பு படம் ரிலீஸ் இன்னும் ஆகாததால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் 4 மாதங்கள் வரை தள்ளி போயுள்ளது.

இந்த படத்துக்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்றுதான் முதலில் டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பான் இந்தியா படம் என்பதால் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பல மொழிகளில் வெளியாக வேண்டியதால் விஸ்வநாதன் என்பதில் திருத்தம் செய்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று படக்குழு டைட்டிலை மாற்றி அறிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

வழக்கமாக தமிழ் படங்கள் எல்லாமே ஆங்கில பட தலைப்புகளாக மாறி வருகின்றன. இதற்கு காரணம் தமிழ் பெயரில் உள்ள படங்களை வாங்க ஓடிடி நிறுவனங்கள் மறுக்கின்றன. அதனால் வணிக நோக்கத்தில் தமிழ் படங்களுக்கு ஆங்கில தலைப்புகளை வைப்பது அதிகரித்துள்ளது. தமிழ் சினிமா என்று சொல்லிக்கொண்டு ஆங்கில டைட்டில் வைத்து படம் எடுக்கும் ஒரு அவலத்தை கோலிவுட்டில்தான் காண முடிகிறது.

சற்று முன்